செவ்வாய், 16 டிசம்பர், 2008

மனிதாபிமானம்

பிறருக்கு உதவும் மனப்பன்மை இளிச்சவாய்த்தனமா நன்பர்களே?

மனிதர்களிடையே மனிதாபிமானம் சுருங்கிக்குறைந்து கொன்டே வருவது கண்கூடு. மனிதாபிமானம் கொன்டோர்கள் இளிச்சவாயர்களாய் சித்தரிக்கப்படுகின்றனர்.இந்நிலை தொடர்ந்தால் அடாவடி மற்றும் அடக்குமுறைக்காரர்களின் கொட்டம் அதிகமாகிவிடும் அபாயம் இருக்கின்றது. தனது குடும்பநலனைம்ற்றும் பேனிக்கொன்டு மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றே தெரியாமல் வாழ்பவர்களால்தான் ரவுடிகள் தைரியமாக உலா வருகிறார்கள்.

நான் சென்னையில் உள்ள சைதாபேட்டை அபித் காலனியில் வசித்தபொழுது அந்த வீட்டு உரிமையாளர் அங்கே 28 வருடங்கள் வசிக்கின்றாராம் ஆனால் பக்கத்துவீட்டில் யார் உள்ளனர் என்று தெரியாதாம். இதைக்கேட்டது எனக்கு திகைப்பாகிவிட்டது. அவரைச்சொல்லியிம் குற்றமில்லை இருக்க இடம்கொடுத்தால் படுக்கபாய் கேட்கும் இந்த உலகத்தில் எப்படித்தான் நடந்துகொள்வது.

சிதம்பரத்தில், எனது பெரியம்மா ஒருவர் இருக்கின்றார், அவர் பிறருக்கு உதவுவதையே தொழிலாகக்கொன்டவர். மிக வசதியானவர், தெருவில் உள்ள அனைவரையும் மற்றும், பிள்ளைகளின் நன்பர்கள் அவர்கள் குடும்பத்தினரையும் தனது குடும்ப உறுப்பினர்போலவே பாவித்து வருபவர். வீட்டில் என்ன ஒரு சாப்பாடு தயார் செய்தாலும் நன்பர்களுக்கு முதலில் தனியாக எடுத்துவைத்துவிட்டுதான் தன் குடும்பத்தை கவனிப்பார். தெருவில் உள்ள யாருக்கேனும் நிகழ்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் தனது வீட்டை உபயோக்கிக்க தயங்காமல் கொடுப்பவர். எனது சிறுவயதில் நான் ந‌ன்பர்களுடன் அவர்கள் வீட்டில் அடித்த கொட்டத்துக்கு அளவே இல்லை. எனது பெரியப்பாவும் பெரியம்மாவின் செய்கைகள் எதுக்கும் முகம் கோனாமல் உதவி செய்வார். அவர்கள் வீட்டு விஷேச நிகழ்சிகளில் ஹம்‍-ஆப்-கே‍ஹெய்ன்‍-கோன் போல குதுகலம் கொடிகட்டி பறக்கும். தனது பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல முறையில் திருமனம் நடத்தி வைத்தார்.
கால ஓட்டத்தில் அவர்களது பிள்ளைகள் பெரியவர்களாகிவிட்டனர், வியாபாரம் சரியாக நடக்கவில்லை, பிள்ளைகள் தலையெடுத்து வந்தபிறகு, பெரியம்மா கையில் அதிகம் காசு புழங்கவில்லை, அவர்களால் எதையும் தீர்மானிக்கும் அதிகாரமும் பறிக்கப்பட்டுவிட்டது. யாருக்கும் எதுவும் செய்ய முடியலையேன்னு கண் கலங்குறாங்க இப்ப. பிள்ளைகள் சொத்துக்காக சன்டைபோடும்போது, நீங்கள் அந்தகாலத்தில் எப்படி செலவளித்தீர்கள் அதனால் வந்த வினைதான் என்று குத்திக்காட்டுகின்றனர். ஊருக்கெல்லாம் படியளந்த பெரியம்மா இப்ப தனது பேரன் பேத்திக்குக்கூட விருப்பப்பட்டமாதிரி செய்யமுடியலையேன்னு கவலைப்படுறாங்க. நான் ஊருக்கு போகும்போதும் வரும்போதும், கைநிறைய ரூபாய் அள்ளிகொடுப்பார்கள். இப்பொழுது அவர்களுக்கு நான் ரூபாய் கொடுக்க வேன்டும் என்று நினைக்கின்றேன், ஆனாலும் என்மனத்தில் இருக்கும் பெரியம்மாவின் பிம்பம் சிதைந்துவிடுமேன்னு கலக்கமா இருக்கு.

அவன்தான் மனிதன் திரைப்படத்தில் நடிகர்திலகம் சிவாஜிகனேசன் அவர்கள் பிறருக்கு உதவும் இதேமாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மகா செல்வந்தரான அவர், சொத்து, சுகம், பனம், காதலி அனைத்தையும் நட்பு, அன்பு மற்றும் பாசத்துக்கு இறையாக்கிவிட்டு, ஓலை குடிசையில் இருப்பார். அவருக்குத்துனையாக, அவரது வேலைக்கரனும் அவர் ஆசையாக வளர்த்த புறாவும் மட்டுமே துனைக்கு. யாருக்குமே இல்லையென்று சொல்லாமல் கேட்பதை கொடுக்கவேன்டும் என்ற கொள்கையுடன் இன்னுமும் இருக்கும் அவரிடம் உள்ள புறாவை தனது பிள்ளைக்கு கேட்டு வரும் நன்பனுக்கு அவன் என்ன கேட்க்க வந்திருக்கான் என்று தெரியாமல், அவனுக்கு விருந்து வைக்க அந்த புறாவையே கொன்று சமயல் செய்யச்சொல்லிவிடுவார், விருந்து முடிந்தபிறகு. நன்பன் புறாவை கேட்கையில், கொடுக்கமுடியவில்லையேன்னு வேதனையில் அப்படியே உயிரை விட்டுவிடுவார்.

பிறருக்கு உதவும் மனப்பன்மை இளிச்சவாய்த்தனமா நன்பர்களே? சொல்லுங்கள்.

எனது பெரியம்மாவிடம் நான் தொலைபேசியில் பேசியபொழுது பெரியம்மா நீங்கள் நன்றாக இருக்கனும் அப்படியென்றால்தான் மற்றவர்களும் உங்களைப்போல உதவுவார்கள். இல்லையென்றால், இவளைப்போல வீனாய்த்தான் போய்விடுவோம் என்று என்னி யாருமே பிறருக்கு உதவமாட்டார்கள்.

எனது பெரியம்மாவைப்போலவே அவரது மூத்தமகனும் பிறருக்கு உதவுவதிலேயே சுகப்பட்டு கிடப்பவர் அதனால் உலகத்தைப்புரியாதவர் என்ற பட்டத்துடன் உலாவருகிறார்.

தொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்றத்தில்(திரு.லியோனி என்று நினைக்கின்றேன்) கேட்ட கதை இது.

ஒரு நாட்டின் ராஜா, நிர்வாகம் வீரம், மனிதாபிமானம், புத்திசாலித்தனம், நீதி மற்றும் நேர்மை ஆகியவ்ற்றில் சிறந்து விளங்குபவன். மாறுவேடத்தில் நகர்வலம் வந்து மக்களின் பிரச்சினைகளை அறிந்து களைவது வழக்கமாக கொன்டிருக்கின்றான்.
ஒருமுறை, நகர்வலத்தின்போது, கால் ஊணமுற்ற ஒருவன் நடக்க முடியாமல், சிரமபட்டுகொன்டு இருபதை பார்த்து அவனுக்கு உதவலாமே என்ற என்னத்தில், அவனையும் தன்னுடைய குதிரையில் அமர்ந்துகொள்ள அழைக்கின்றான். உன்மையில் அவன் ஒரு திருடன், வந்திருப்பது ராஜா என்றறியாமல் குதிரையை அபகரிக்கும் நோக்குடன், ஊனமுற்றவன்போல நடிக்கின்றான். திருடனும் ராஜவின் அழைப்பினை ஏற்று, ராஜாவை கீழே இறங்கி, குதிரைமேல் ஏற உதவுமாறு கேட்கின்றான். ராஜாவும் கீழேஇறங்கி அவனை ஏற்றிவிட்டு, எற எத்தனிக்கையில், திருடன் ராஜவின் குதிரையை ஓட்டிககொன்டு சென்றுவிடுகின்றான். ராஜா திகைத்து நின்றுவிட்டு, பிறகு நடந்தே அரன்மனைக்கு சென்றுவிடுகின்றார்.
பின்நாளில் அதே திருடன் வேறொரு குற்றத்திற்காக காவலர்களிடம் மாட்டி தண்டனைக்காக‌ ராஜாவிடம் அழைது வரப்பட்டான், அவனை அடையாள்ம் கன்ட ராஜா, அவனுக்கு சிறை தண்டனை கொடுத்தார். பிறகு சிறைச்சாலைக்கு சென்று அவனிடம் தான் மாறுவேடத்தில் வந்தபொழுது தன் குதிரையை அவன் எமாற்றி திருடிச்சென்றதை சொன்னார். உடனே அந்த திருடன், ராஜாவின் கால்களில் விழுந்து மன்னியுங்கள் என்று கதறினான், உடனே ராஜா அவனை மண்ணித்துவிட்டதாக கூறி, படாரென அவன் காலில் விழுந்து, தன்னிடம் அவன் குதிரையை திருடிய விதத்தினை யாரிடம்மும் கூறிவிடதே என்று கெஞ்சுகின்றார். அந்த திருடன் அப்படியே திகைத்து நின்றுவிட்டு அப்படியே கண்ணீர்விட்டு கதறி அழுது, ராஜா என்னை மண்ணியுங்கள், இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று சொல்லி, அக்கனம் முதல் திருந்தி நல்லவனாகிவிடுகின்றான்.

1). ராஜா ஏன் அவன் காலில் விழுந்து யரிடமும் சொல்லதே கேட்டார்?
2). திருடன் ஏன் அதனால் திருந்தினான்?

நிருடனுக்கும் ஒன்றும் புரியவில்லை என்னடா, மக்களால் பெரிதும் போற்றப்படக்கூடிய மாமண்ணன், சாதாரன விசயத்துக்காக, நம் காலில் விழுந்து, தான் ஏமாந்த விதத்தை யாரிடமும் சொல்லிவிடாதே என்று கெஞ்சுகின்றானே என்று குழம்பிவிட்டான். காரணமில்லாமல் இப்படிசெய்ய மாட்டானே என்று யோசித்தான்.
பளிச்சென்று அவன் மனதில் அதன் காரனம் பளிச்சிட்டது, அடடா இப்படிப்பட்ட மண்ணனின் ஆட்சியிலா இப்படி செய்தோம், இனிமேல் திருடக்கூடாது என்று என்னி, அழுது, மண்ணனிடம் மண்ணிப்பு கேட்டான்.

திருடன் புரிந்துகொன்டது இதுதான்:

கல்வி, கேள்வி, மனித நேயம் அனைத்திலும் சிறந்த அந்த மண்ணன் அவைகளனைத்தும் மக்களிடையேயும் தழைத்தோங்கவேன்டும் என்று நினைப்பவன். யாரோ ஒருவன் கஷ்டப்படுபவன் போல ஏமாற்றி திருடிவிட்டன் என்று மக்கள் அறிந்தால், அடுத்து கஷ்டப்படுபவர்களுக்கு, யாரும் உதவ மாட்டார்களே மனித நேயம் மறைந்துவிடுமே என்றஞ்சி, யாரிடமும் சொல்லிவிடாதே என்று கேட்டிருக்கின்றான்.

பிறருக்கு உதவும் மனப்பன்மை இளிச்சவாய்த்தனமா நன்பர்களே? சொல்லுங்கள்.

என்னை இப்பதிவிட தூன்டிய பதிவு இதுதான்

.

0 கருத்துரைகள்: