பொழுதுபோக்க படம் பார்ப்பது என்றிருந்த நான், படத்தின் நுனுக்கங்களையும், சிறப்பம்சங்களையும் உற்றுநோக்க ஆரம்பித்தது நான் பொருளீட்டும் பொருட்டு குடும்பத்தைவிட்டு தனித்து ஜப்பானில் இருந்த மூன்று வருடங்களில்தான். கிராமத்தானான நான் , தொழில் நுட்ப்ப உலகத்தின் தலைமையான ஜப்பானைப்பார்த்து விக்கித்துப்போனேன். ஜப்பான் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை வடக்கம்பட்டி மக்களின் வாழ்கைத்தரத்தோடு ஒப்பிட்டு பார்த்து நொந்துபோயிட்டேன்.
அட வருமானம் இல்லமல் ஏழையாக இருப்பது என்பதெல்லாம் குறைந்த வாழ்கைத்தரம் என்று சொல்லவில்லை.
உன்மையில் ஏழ்மை நிலமையில்தான் வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
ஏழ்மையில் இருக்கும் கஷ்ட்டத்தினை குடும்பத்தினருடன் பங்குபோட்டுக்கொன்டு, ஒருவித அடக்கமான நிலையில் நான் இருந்ததை இன்று நினைத்தாலும் சுகமான அனுபவங்களாக இருக்கிறது.
ஆனால் வாழ்க்கைஎன்றால் என்ன? மனிதம் என்றால் என்ன? என்றே தெரியாமல் காட்டு விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்பட்டு, மற்றவர்களின் வாழ்கைத்தரத்தோடு தங்களை ஒப்பிடக்கூடத்தெரியாமல், விதிதான் நம்மை இப்படிப்படைத்துவிட்டது, அதனால், வெந்ததைத்திறு விதி வந்தால் சாவோம் என்று இருப்பவர்களை நினைத்து நினைத்து நெஞ்சம் நொறுங்கிப்போய்க்கொன்டே இருக்கின்றேன்
எங்கள் ஊரில் கூலிவேலை செய்து பிழைப்பவர்களின் நிலை அப்படித்தான் இருக்கின்றது. பென் களின் நிலமையோ அதைவிடக்கேவலமாக இருக்கின்றது. அதனால்தான் பெண் குழந்தைகளை பிறந்தவுடனே கொன்றுபோடுகிறார்கள். இந்த கருத்தை, கருத்தம்மா திரைப்படத்தில் சவுக்கடி போல சொல்லியிருப்பார்கள் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள்.
இயக்குனர் பாலா அவர்களின் நான் கடவுள் திரைப்படத்தினை நேற்றுப்பர்த்து அதிர்ச்சியாகிவிட்டேன், மனித வாழ்க்கையின் அவலங்களை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டியிருப்பதை கன்டு நெஞ்சுருக அழுதேன். அவர் காட்டியிருந்ததுதான் உன்மையான வாழக்கை அதில்தான் வாழ்ந்துகொன்டிருக்கின்றோம் என்பதை ஒத்துக்கொள்ள மனது மறுக்கின்றது. சிற்றின்பத்தில் திழைக்க, இல்லை வாழ்க்கை இப்படிப்பட்டது இல்லை இதெல்லாம் சும்மா, என்று மனத்தளவில் மறுத்துக்கொன்டு முடிந்த அளவுக்கு சந்தோஷமாக இருக்க நினைக்கின்றோம்.
உன்மையில் மக்களாக பிறந்த அனைவரும் கன்டிப்பாக பார்க்கவேன்டிய படம். பாலாவைப்போலவே இலங்கைக்கொடூரன் ராஜ பக்சே சிந்தித்திருக்கின்றார் போல அதனால்தான் இப்படி ஒரு முடிவோடு ஈழத்தமிழர்களை அழித்துக்கொன்டிருக்கின்றார். இப்படத்தின் கருத்து
"நான் கடவுள், மரனம் என்பது கெட்டவர்களுக்கு நான் கொடுக்கும் தன்டனை அதுவே வாழமுடியாதவர்களுக்கு நான் கொடுக்கும் வரம்"
வரம் மட்டும் கொடுக்கும் கடவுள் ராஜ பக்சே







1 கருத்துரைகள்:
ஒரு தகிக்கிற பதிவு.
வசிக்கிற போது பொறுப்பான கோபம் கொண்டுவரும்
எழுத்துக்கள். இன்னும் அதிகமான பொறுப்பு தேவை இருக்கிறது
சக்திவேலுக்கும். புகைப்படங்கள் நிறைய்ய வெறியேற்றும்.
அலைக்கழிக்கும். பாடு படுத்தும். யோசிக்க வைக்குமா?
எனக்குத்தெரியவில்லை.
நான் உங்கள் கூட வருகிறேன்.
கருத்துரையிடுக