செவ்வாய், 19 ஆகஸ்ட், 2008

இதென்ன புதுக்கதை

இதென்ன புதுக்கதை
http://www.tamilhindu.com/
தமிழரின் தாய் மதம் என்ற முகப்புடன் உள்ள இந்தத்தளத்தினை ஐய்ய‌மாருங்க‌ எல்லாம் தங்களது வலைப்பதிவில் சிபாரிசு செய்கிறார்கள். சிரிப்பாயிருக்கின்றது இதைப்பார்த்தால்.

தமிழ் வீனாய்ப்போன மொழி தமிழ் மூலம் கடவுள்களுக்கு மந்திரம் சொன்னால் கேடுவிளையும். தமிழர்கள் கோவிலில் சாமிசிலை இருக்கும் இடத்துக்கு வரக்கூடாது, என்று சொன்னவர்கள் ஏன் இப்படி திடீர்னு அந்தர் பல்டி அடிக்கிறார்கள்?

தமிழர்களின் சம்பிரதாயமான பழக்கவழக்கங்களை ஜெயலலிதா மூலம் சட்டமியற்றி கடா வெட்டக்கூடாது, கோழி பலியிடக்கூடாதுன்னு சொன்னவர்கள் இப்படி திடீர்னு அந்தர் பல்டி அடிக்கிறார்கள்?

மனித உடலின் நிறங்கள் அடிப்படையில் அவன் செய்யவேன்டிய தொழிலை நிர்மானித்த‌து வர்ணாசிரமம். பிராமணர்களை உயர்ந்த இடத்தில் வைத்து கல்விக்கு உரிமையுடைய ஒரே இனம் பிராமணர்கள்தான் என்று தமிழர்களை கன்மூடித்தனமாக வஞ்சித்த வர்னாசிரமத்தை பின்பற்றச்சொல்லும் கீதை மற்றும் ராமாயனத்தை கொன்ட இந்துமதத்தைக்கொன்டவர்கள்தான் தமிழர்கள் என்று சொல்கிறார்களா?

இல்லை

தமிழர்கள் விழித்துக்கொன்டிருக்கின்றனர், நமது பருப்பு இனிமே வேகாதுன்னு புரிஞ்சிகிட்டு நாங்களும் தமிழர்கள்தான் எங்களையும் உங்களோடு சேத்துக்கொன்ங்கன்னு என்று கைபர்‍போலன் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் சொல்லுகிறார்களா?

எப்படியோ இனைய வலைப்பதிவு என்ற ஊடகத்தின்மூலம் ஒரு கருத்துப்பரவல் புரட்சி நடந்து தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை புரிந்திருக்கின்றார்கள் என்பதையே இது காட்டுகிறது.

அந்தத்தளத்தில் (http://www.tamilhindu.com/)
தமிழர்கள் எல்லாம் முஸ்லீம் மதத்துக்கு போறாங்க, கிருஸ்து மதத்துக்கு போறாங்கன்னு ஐய்யமாருங்க எல்லாம் இப்படி அடிச்சுக்கிறாங்க. இந்துமதத்தால் மற்ற மதத்தவர்களை ஈர்த்து இந்துமதத்துக்கு மாற்றும் வல்லமை இல்லையா? அட போங்க, தன் மதத்தவர்களையே தக்கவைத்துக்கொள்ளூம் வல்லமை இந்துகடவுள்களுக்கு இல்லை, இதில் எங்க கிருஸ்துவர்களை ஈர்க்கப்போகுது.

தமிழர்கள் எம்மதமும் சம்மதம்னு நினைப்பவர்கள். மசூதிக்கு மந்திரிக்கப்போவது, சர்ச்சுக்கு வழிபடப்போவதுன்னு எந்த பேதமும் பார்க்கமாட்டார்கள். நாகூர் தர்கா மற்றும் வேளாங்கன்னி கோவிலுக்கு வரும் இந்து தமிழர்கள் கூட்டத்தினை பார்த்தால் புரியும்.


நாளுக்குநாள் கோவிலுக்கு வரும் தமிழர்கள் கூட்டம் அதிகமாயிக்கிட்டேபோகுது ன்னு ஐய்யமாருங்க எல்லாம் பூரிச்சுக்கிறாங்க. தமிழர்கள் பக்தி பற்றி நல்லாவே தெரியும்.

கஷ்டகாலத்தில் கையொடிய கடவுளை கும்பிடும் அவர்கள் மற்றநேரங்களில் கன்டுகொள்வதே இல்லை.
'உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்' திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் ரமேஷ்கன்னா இருவரும் திருடச்செல்வார்கள், அதுக்குமுன் சாமியிடம் திருட்டில் கிடைப்பதை சாமிக்கும் கொடுக்கின்றோம் என்று சொல்லி மனமுருக கும்பிட்டுச்செல்வர். திருடிய பிறகு இருவரும் கடவுளுக்கு பங்கு கொடுக்கும் அழகை பாருங்கள்.
ரமேஷ்கன்னா ஒரு வட்டம் வரைந்து, திருடிய ரூபாய்களை மேலே விட்டெறிந்து கடவுளே உனக்கு வேன்டிய பங்கை வட்டத்துக்குள்ளே எடுத்துக்கொன்னு சொல்லுவார். கீழே விழுந்தபிறகு ஆகா உனக்கு கொஞ்சமா எடுத்துக்கிட்டு எனக்கு நிறைய குடுத்துட்டியேன்னு சொல்லுவார். பிறகு கார்த்திக் சொல்லுவார், கடவுளே உன்னை ஒரு வட்டத்துக்குள் அடைக்க விரும்பவில்லை, நான் உயரே தூக்கிப்போடுகிறேன், உனக்கு வேன்டியதை எடுத்துக்கிட்டு மிச்சத்தை எனக்குபோடுன்னு சொல்லி அனைத்தையும் லவட்டிக்குவார்.

இதுதான் தமிழர்களின் பக்தி லட்சனம். மாதாம் ஐந்தாயிரம் ரூபாய் தருகிறேன் என்றால் தங்களது பரம்பரையையே வேறுமதத்துக்கு மாற்றிவிடுவார்கள்.