செவ்வாய், 29 ஜூலை, 2008

போலி டோன்டு விவ‌கார‌ம்

போலி விவ‌கார‌ம் முடிவுக்கு வ‌ந்துவிட்ட‌‌து என்று ஐய்ய‌மாருங்க எல்லாம் கொண்டாட்ட‌ம் போடுறாங்க‌. ம‌லேசிய‌ மூர்த்திதான் போலி டோன்டு என்று சொல்லி போலீஸ் விசார‌னைக்கு உட்ப‌டுத்தி விசாரித்து மிர‌ட்டி என்ன‌ன்னெவோ ந‌ட‌ந்துவிட்ட‌து.

என‌க்கு இர‌ண்டு கேள்விக‌ள் ம‌ன‌தில் இந்நேர‌ம் எழுகின்ற‌து.

1). இனைய‌த்தில் இடும் ச‌ன்டைக‌ளுக்கெல்ல‌ம் போலீஸ் உய‌ர‌திகாரிக‌ள் வ‌ந்து ப‌ஞ்சாய‌த்து செய்வார்க‌ளா என்ன‌?

2). யாரேனும் ஆட்சேபிக்கும் ப‌ட்ச‌த்தில் குறிப்பிட்ட‌ ஒரு வ‌லைப‌திவினை கூகிள் நீக்கிவிடுமா என்ன‌?

இவையெல்லாம் போக‌ட்டும். மூர்த்தி மேலுள்ள‌ த‌னிப்ப‌ட்ட‌ விரோத‌த்தினால் அவ‌ர்தான் போலி என்று சொல்லி அவ‌ரால் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ போலித்த‌ள‌ங்க‌ளை அவ‌ராலேயே போலீஸ்மூல‌ம் மிர‌ட்டி நீக்க‌வைத்த‌வ‌ர்க‌ளால் ஏன் doondu.blogspot.com வ‌லைப்ப‌திவினை நீக்க‌முடிய‌லை? மூர்த்தியின் மன்னிப்பு பதிவு ஏன் doondu தளத்தில் போடப்படவில்லை? இதிலிருந்தே தெரிய‌வில்லையா. போலியார் யார் என்ப‌து.

நான் ஏற்க‌ன‌வே சொல்லியிருக்கின்றேன், மீன்டும் சொல்லுகிறேன். போலியார் என்ப‌து த‌னியாள் அல்ல‌. ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளின் உள்ள‌க்குமுற‌ல்தான் அது.