வியாழன், 28 மே, 2009

நான் தமிழன், தோல்வியை ஒத்துக்கொள்கிறேன்




தமிழன் அடங்கிக்கிடக்கப்பிறந்தவன் இல்லை என்று ஒவ்வொருவரும் நெஞ்சை நிமிர்த்திச்சொல்லும் வகையில் என்னங்களுக்கு உரமேற்றிக்கொன்டிருந்த என் தலைவன் தமிழ் ஈழ தேசிய த்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வஞ்சகர்களின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது, எனது "நான் தமிழன் " என்ற பெருமிதத்துக்கு கிடைத்த பெரிய அடியாகும். நான் தோல்வியை ஒத்துக்கொள்கிறேன். தமிழன் என்றைக்கும் அடங்கிக்கிடக்கப்பிறந்தவந்தான். என்றைக்காவது ஒருநாள் எனது உயிர் போவதுக்குள் மீன்டும் "நான் தமிழன்" என்று சொல்லும் காலம் வராதான்னு ஏக்கத்துடனே சொல்லிக்கொள்கிறேன்,

சொல்லுங்க எசமான் நாங்கள் தமிழர்கள், அடங்கிக்கிடக்கமட்டும் பிறந்தவர்கள், எங்களை அடக்க உரிமைப்பெற்றவர்கள் நீங்கள், எங்களது உழைப்பு, மற்றும் சொத்துக்கள் அனைத்தும் உங்களுக்கானவை, நீங்கள் பார்த்து ஏதாவது செய்தால், வாங்கிக்கொள்கிறேன்.

தலைவா தியாகத்தின் திருவுருவமான உன்னைப்போல ஒருவன் இவ்வுலகத்தில், மறுபடியும் வருவானா? உன்னால் நாங்களும் தமிழன் தான் என்று பெருமிதப்படும் காலம் வருமா? ஈழத்தில் சொந்தங்களை, சொத்துக்களை, சுகங்களை இழந்த தமிழ் உறவுகளின் மனக்காயங்களை காலம் ஆற்றும் அதுக்கான பக்குவத்தினை கடவுள் கொடுக்கட்டும். கண்ணீருடன் தமிழ் உணர்வுக்கு விடைகொடுக்கின்றேன்.

புதன், 27 மே, 2009

இலங்கைத்தமிழர்கள் கதி அதோ கதிதான்

இலங்கைத்தமிழர்கள் கதி அதோ கதிதான் போல இருக்கு. ஐக்கிய நாடுகள் சந்திப்பில் இலங்கை ஒரு உத்தமமான நாடு என்றும், நடுநிலையாளர்கள் யாரும் அங்குள்ள மக்களை சென்று பார்வையிடக்கூடாதுன்னு இந்தியா உட்பட 28 நாடுகள் சொல்லியிருக்கின்றன. அமெரிக்கா ஏதோ செய்மதிப்படங்கள் எடுத்தனர் அதை வைத்து இலங்கை அரசை குற்றவாளிக்கூன்டில் ஏற்றப்போகின்றன என்று என்னன்னமோ சொன்னார்களே என்ன ஆச்சுன்னு தெரியலை. சும்மாவே நாயாட்டம் ஆடும் அந்த இலங்கை மரனக்கொடூரன் இனிமேல் பேயாட்டம் ஆடுவானே!. பாவம் கிழக்கு மற்றும் கொழும்பு வாழ் தமிழர்கள் என்ன கதியாகப்போகிறார்களோ.

ஆஸ்திரேலியா மற்றும் அன்டை நாடுகளுக்கு அகதிகளாக போகும் இலங்கை தமிழர்களை அந்த நாடுகளுக்குள் விடாதீர்கள், எங்கள் நாடுக்குள்ளேயே வைத்து அவர்களை கொல்லுகிறொம்ன்னு சொல்லுறான் கோத்தாபய.

இந்தியா ஏன் இப்படி மகா மட்டமாக நடந்துக்குதோ? சரி ராஜீவ் காந்தியை கொன்னதுக்கு பதிலா லட்சம் தமிழர்களையும், தலைவர்களையும் கொன்னாஅச்சே அதன் பிறகும் வெறி அடங்கலையா?

தமிழ்நாட்டு மீனவர்களையே கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு இப்படி ஓடி ஓடி உதவி செய்யுறாங்களே. இந்தியா ஒரு சோப்ளாங்கி நாடுன்னு நினைக்குறேன். ஏதாவது செய்யபோய், ராஜபக்ஷே ஏதாவது கோவமாக பேசிவிட்டால் இந்தியாவால் ஒன்னுமே சொல்ல முடியாது அவமானமாக போய்விடும் அதனால்தான் இப்படி வழி வழின்னு வழிந்துகொன்டு உதவுறாங்க போல.

பாக்கிஸ்தான் இந்தியாவின் தலைப்பகுதியை சுத்தமாக பிடிச்சுகிடுச்சு அதை ஒன்னும் செய்ய முடியலை, சீனா அருனாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளை பிடிச்சிருக்கு அதை கேட்க்க துப்பில்லை. இப்படிஒரு கேவலப்பட்ட பிழைப்புக்கு நான்டுக்கிட்டு சாகலாம்.
நான் இந்தியன்னு சொல்லிக்கவே வெக்கமாயிருக்கு. சரி நன்பர்களே சென்னையில் இருக்கும் எனது வீட்டில் ஒரு பதுங்கு குழி வெட்டனும், அதுக்கு தேவை சீக்கிறம் வரும்போல இருக்கு.

சனி, 23 மே, 2009

மக்களே மனதைக்கல்லாக்கிக்கொள்ளுங்கள். மாபெரும் மனிதப்பேரவலம் நடந்திருக்கின்றது

உலக தமிழ் உறவுகளே,
நான் பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு மக்களை சந்தித்து, உற்றங்கள் சுற்றங்களிடம் அலாவளாவி, நிறைய புத்தகங்கள் படித்து, நிறைய சினிமாக்கள்பார்த்து, மனித மணங்களை ஆராய்ந்திருக்கின்றேன். வணிகவியல் மாணவனான நான் மனித மனக்கலையில்மிகுந்த ஈர்ப்பும் ஈடுபாடும் கொன்டவன். என்னை செம்மைப்படுத்தியதில் சினிமா பெரும்பங்கு வகிக்கின்றது. ஆம் சினிமாவால் செம்மையானேன்.

எனது மனக்கணக்கின்படி இலங்கையில் மாபெரும் மனிதப்பேரவலம் நடந்திருக்கின்றது. கல்லும் கதறிஅழக்கூடிய மாபெரும் சோகச்சம்பவம் நடந்திருக்கின்றது. ஈழத்தமிழர்களுக்கும் , அவர்களின் பாதுகாப்பு அரணாக இருந்த விடுதலைப்புலிகளின் தலைமைகளுக்கும், உலகமகா துரோகம், வஞ்சகமிழைக்கப்பட்டு இருக்கின்றது.

மக்களே மனதைக்கல்லாக்கிக்கொள்ளுங்கள், இச்சம்பவம் விரைவில் வெளிக்கொனரப்படும் என்று நம்புகிறேன். அது எந்த ஒரு கற்பனையிலும், கடந்த வரலாறுகளிலும் பேச்சுக்களிளும், கதைகளிலும் சினிமாக்களிலும் இல்லாத சோகமாக இருக்கும்.

மனிதத்தன்மை என்பது யாதெனில் தமிழர்களிடம் காட்டப்படாதது.

புதன், 20 மே, 2009

சீமான் களுக்கும், தாமரைகளுக்கும் வைக்கோக்களுக்கும் ஒரு கடிதம்

சீமான் களுக்கும், தாமரைகளுக்கும்.
நலத்தை, வளத்தை, சுற்றத்தை மற்றும் உற்றத்தை தொலைத்த நமது தமிழ் உறவுகளின் பால் நீங்கள் கொன்டுள்ள வருத்தம் வேதனை அப்பட்டமாக தெரிகின்றது. உங்க‌ளது உள்ளக்கிடக்கையின் குமுற‌ல்கள் உணர்ச்சி பிரவாகமெடுத்து வெடித்து வெளிவருவதிலிருந்தே தெரிகின்றது எந்த அளவுக்கு உள்ளுக்குள் அழுதிருப்பீர்கள் என்று. கவலைப்படாதீர்கள் உறவுகளே, என்ன செய்வது மனிதர்களாகப்பிறந்துவிட்டோம் போட்டி நிறைந்த உலகில் உணர்ச்சியை வெளிக்காட்டுவது கூட தோல்வியாக பாவிக்கப்படுவதால் மனிதன் இயல்பான உணர்ச்சியைகூட வெளிக்காட்டாமல் விலங்குக்கும் கேவலாமாக மாறிக்கொன்டு வருகின்றான்.
உங்களைப்போலத்தான் நானும், ஒடுக்கப்படும் மக்களை நினைத்தால் நொறுங்கிப்போய்விடுகின்றேன். நமது உணர்ச்சிகள் எல்லாம் நியாயமான‌துதான் ஆனால் அதனால் என்ன விளைச்சல் கான முடியும் என்று நினைக்கின்றீர்கள்?
1). இப்படி மக்கள் அழிக்கப்படும் விவரம் தெரியாத மக்கள் தெரிந்த்துகொள்வார்கள்
2). உங்களுக்கு உணர்ச்சிகளை வடித்துவிட்ட திருப்தி இருக்கும்

இதைத்தவிற வேறொன்றும் இல்லை. உங்களுக்கான திருப்தியை விடுங்கள் விவரத்தினை தெரிந்துகொன்ட மக்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கின்றீர்கள்? அட அப்படியா என்று சொல்லிவிட்டு போய்க்கொன்டே இருப்பார்கள். நான் நன்றாக கவனித்துப்பார்த்ததில் தமிழர்களில்

1). அரசியல் தொழில் செய்பவர்கள் ஐய்யோ ஐய்யோ இப்படி பன்னுறாங்களே, இதுக்கு காரனம் இவந்தான் என்று நிருபிப்பதில்தான் கவங்கொள்கின்றனர்.

2). மிகச்சிறிய, சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில், சொந்தத்தொழில் செய்யும் மறத்தமிழர்கள்கூட ஒருவித முதலாளி மனப்பான்மையுடன், எதுக்கு தனி நாடு கேக்கனும்? சிறுபான்மையா இருந்தா அடங்கிப்போக வேன்டியதுதான, அப்படி என்னகொழுப்பு அவிங்களுக்குன்னு நெனக்கிறாங்க.

3). வேலைசெய்பவர்கள் உன்மையில் ஒடுக்கப்படும் தமிழர்களின் வலிகளைப்புரிந்து கொன்டு வருத்தப்படுகின்றனர் அவ்வளவுதான்.

4). பொருளீட்டும் பொருட்டு, மற்றும் அடைக்கலம்தேடி புலம்பெயர்ந்த அனைவருமே வேதனை மற்றும் துன்பத்தில் தவித்து ஊர்வலம் சென்று இயலாமையால் நொறுங்கிப்போகின்றார்கள்

5) சீமான்களும், தாமரைகளும் சாப்பிடமுடியாமல், தூங்கமுடியாமல், துக்கம் வாட்ட,. நமக்குமட்டும்தான் தமிழுறவுகளைப்பற்றிய அருமை தெரிந்திருக்கு, சரி இதை எல்லோருக்கும் சொல்லி, ஒரு எழுச்சியை உண்டாக்கி அதன்மூலம் ஒடுக்கப்படும் தமிழர்களை காப்பாற்றலாம் என்று மாய்ந்து மாய்ந்து கத்தி எமாந்துபோகிறார்கள்.

ஆகவே கஷ்ட்டப்படுபவர்களின் நிலை அப்படியேத்தான் இருக்கு. உன்மையில் நீங்கள் செய்யவேன்டியது, வாழ்க்கையென்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு மனித வாழ்க்கையைப்பற்றிய அறிவை போதிப்பதுதான், சரியான தீர்வு.
மனக்கவலைகளை விட்டொழியுங்கள், உலகம்முழுவதிலும் மக்கள் எங்காவது அடக்கப்பட்டுக்கொன்டேதான் இருக்கின்றார்கள். அடக்கப்படுபவர்களும் சரி விதிதான் இப்படி நம்மைபடைத்துவிட்டதுன்னு அடங்கிபோய்விடுகிறார்கள். கஷ்ட்டத்திலேயே ஊறிய அவர்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல, குச்சியால் அடித்தால் உடம்பை இறுக்கிக்கொள்வர், தடியாலடித்தாலும் அப்படியே, அவர்களை சிங்கம் அடித்து கொல்லும்போதும் அதே வெளிப்பட்டினைத்தான் கான்பிப்பார்கள்.
ஆனால் பார்க்கும் நமக்குத்தான் ஐய்யோ ஐய்யோ இப்படி இருக்காங்களேன்னு மனசும் உயிரும் அடித்துக்கொள்ளும். இதை உணர்ந்த்துகொள்ள முயர்ச்சிசெய்யுங்கள்.

இப்படி செய்கிறார்களே, செய்கிறாகளேன்னு கத்தி கதறுவதைவிட, வாழ்க்கையைத்தொலைத்த ஒருத்தரிடம், ஒரே ஒருத்தரிடம், அவ்ர் எதைத்தொலைத்திருக்கின்றார், அவரது வாழ்வுரிமைகள் என்ன, கடமை என்ன அதைஎப்படிச்செய்வதுன்னு சொல்லி செய்யவைத்துப்பருங்கள் உங்களுக்கு என்ன்படி ஒரு நிறைவு வரும் என்று. அதன்பிறகு அந்த மனநிறைவே உங்களைஅடுத்தடுத்த பாதைகளுக்கு இட்டுச்செல்லும்.

சொந்தங்கள் சாகடிக்கப்ப்ட்டுவிட்டார்கள், வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள், அவர்களை காப்பாற்றியவர்கள் அழிக்கப்பட்டுவிட்டார்களே என்று நினைத்து நினைத்து வெம்பிப்போவதைவிட சரி, அவர்கள் கடமையை செய்துவிட்டார்கள், வாழ்வுக்கு ஒரு வழியையும் காட்டிவிட்டார்கள், அவர்கள் செய்தது மகாத்தானது, தமிழர் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டதுன்னு சமாதானம் ஆகுங்கள். எதிரிகளை நமது வாழ்வின் வெற்றிமூலம் தோற்க்கடிப்போம்.

சீமான்கள் ஆசைப்படும் தமிழர்களுக்கான நாட்டை, வெற்றிகரமான வாழ்வின்மூலம், சொந்த்தமாக விலைக்கு வாங்கும் நிலைக்கு வருவோம்.

நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழைகாலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே
================================================================================================

ஐய்யா நெடுமாறன்களே, வைக்கோக்களே, ராமதாசுக்களே, கோபால்களே போதுமைய்யா உங்க‌ள் தமிழர்கள் கரிசனம். ஆ ஊ அவந்தான் இல்லை இவந்தான், இப்படி இல்லை அப்படி, கை வைத்துப்பார்ன்னு கூப்படுபோட்டெ பொழப்பை ஓட்டுறீங்களே.
புலிகள் உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர், தமிழர்களை காக்க, என்னென்னவோ தியாகங்கள் செய்து செய்து மிகவும் ஒரு இக்கட்டான நிலையில் வந்திருக்கின்றனர். அவர்களை அலைக்கழித்தது போதும், தியாகத்தின் திரு உருவங்களை கேவலப்படுத்தும் செயல்களை விட்டுவிடுங்கள். புலிகள் 3000 பேர் வெளியேறி பரவியிருக்கின்றனர் அவர்கள் என்னமோ செய்துவிடுவார்கள் என்று ஏன் கூப்படு போடுகிறீர்கள்? அவர்கள்தான் யாருக்கும் தெரியாமல் செய்கிறார்களே அப்புறம் ஏன் இப்படி கத்தி கத்தி சொல்லுகிறீர்கள்? புலிகள் மௌனமாகிவிட்டால் உங்களால் அரசியல் வியாபாரம் செய்யமுடியாதுன்னு பரபரத்து பயப்புடுறீங்களா? போதுமைய்யா போதும். அவர்களை அவர்கள் நோக்கில் விட்டுவிடுங்கள். உங்கள் வியாபார உத்திகளை தியாகக்கடவுள்களிடம் காட்டாதீர்கள்.
நன்றி.

செவ்வாய், 19 மே, 2009

நம்மில் ஒவ்வொருவரும் பிரபாகரன்தான்.



நாதியில்லாத தமிழ் சமூகம் இலங்கையில் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டு, சோறு, தண்ணீர் இல்லாமல் வீதிக்கு விரட்டி. மகன், மகள், அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை அனைவரும் பிரிக்கப்பட்டு, கொல்லப்பட்டு. லட்சம் மக்களை மனவியாதிக்காரர்களக்கி, மனிதப்பேரவலத்தை தாங்கமுடியாமல், தம்மக்களுக்கு உணவுகூட கொடுக்க முடியவில்லையே என்று வேதனையில் வெம்பி, வெளித்தொடர்புக்குகூட வழியில்லாமல்.

எங்கள் துப்பாக்கிகளை மௌனிக்கின்றோம் என்று அறிக்கை வெளியிட்ட‌போதே எனக்குள் சுர்ரென்று பொறிதட்டியது, நினைத்ததுபோலவே நடந்துவிட்டது.

சூசை அவர்கள் 3 நாட்க்களுக்குமுன்னர்கூட அழுதார், 10000 பேர் 3 நாளில் கொல்லப்பட்டனர், 25000 பேர் படுகாயமுற்று இருக்கின்றார்கள். லட்ட்சம் மக்கள் உணவில்லாமல் இருக்கின்றனர் என்று. அவனின் கண்ணீரும் இப்பொழுது அடக்கப்பட்டுவிட்டது.

லட்சம் மக்களின் கதறலை இவ்வுலகமே அலட்சியம் செய்தது.

நாத்திகர்களே, சொல்லுங்கள் இம்மக்களுக்கு இப்படிபட்ட சூழ்நிலையில் கடவுளைத்தவிற வேறு யார்மீது நம்ப்பிக்கை வரும்?

நாதியில்லாமல், பிழைக்க வழியில்லாமல் தன்னை நம்பி வந்த மக்களை கண்ணை இமை காப்பதுபோல காத்து, எதிரிகளுடன் போராடி, முடியாதபோழுது தன்னை மாய்த்துக்கொள்ளும் போராளிபாக்குவத்தில் தங்களை முடித்துக்கொன்டனர் புலிகள்.
சரனடைய வெள்ளைக்கொடியுடன் வந்தார்கள் என்பதைஎல்லாம் நான் நம்பத்தயாராய் இல்லை.

அடிப்பொடிகளை களமாடவிட்டு தான் மட்டும் தப்பிப்போக வழியிருந்தும் தப்பிக்காத மாபெரும் தலமையைக்கொன்டது விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது நிருபனமாகியிருக்கின்றது.
மாபெரும் தலைவன் பிரபாகரனின் அபிலாஷைகள், கனவுகள் ஆசைகள் நிறைவேறுவதைபார்க்காமலே சென்றுவிட்டார்களே தலைவர்கள் என்று யாரும் கவலைப்படத்தேவையில்லை. போராளிகள் விதைக்கப்பட்டுதான் இருக்கின்றார்கள். தமிழர்களுக்கு என்று ஒரு நாடுவேன்டும், தமிழர்கள் எப்படி தங்களது உண்ன‌தமான உழைப்பினால், யாரையும் சார்ந்திராமல் முன்னேறுவான் என்பதை உலகிற்க்கு காட்ட, நமது தமிழ் தேசிய தலைவர் சொல்லிக்கொடுத்து இருக்கின்றார். எனவே தமிழர்களே விட்டொழியுங்கள் அழுகையை, நம்மில் ஒவ்வொருவரும் பிரபாகரன்தான். கலக்கத்தை விட்டொழித்த்து, புது உலகை நிர்மானிக்கத்தயாராகுங்கள்.

தமிழர்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்குவோம். தமிழ் தேசியத்தலைவரின் கணவை உன்மையாக்குவோம்.

நமக்கு யாருமே உதவியில்லை, நமக்கு நாமேதான் உதவி. உழைப்பு, உழைப்பு, உழைப்பு வேறெதுவும் சிந்திக்காமல் உழைப்பு உழைப்பு உழைப்பு ஒன்றைமட்டுமே கொள்கையாகக்கொன்டு முன்னேறி , நமது பிள்ளைகளுக்கு மாவீரர்களின் தியாகங்க‌ளை சொல்லி வளர்த்து, நல்ல நேரம் வரும் நாளை எதிர்பார்த்து இருப்போம்.

திங்கள், 16 மார்ச், 2009

என்றைக்கு வரும் நல்ல செய்தி?

இலங்கைக்கொடூரன் மகிந்த வின் ஆனவப்பேச்சு சமீப காலங்களாக இல்லாமல் இருப்பது சற்று நிம்மதியாக இருக்கு. ஆனாலும் தினமும் 30 அல்லது 50 தமிழர்கள் சிங்களக்கொடூரர்களால் கொல்லப்பட்டுக்கொன்டிருக்கின்றனர் என்ற செய்தி வந்தவன்னமாகத்தான் இருக்கு, மனசும் கலக்கமாகத்தான் இருக்கு. இலங்கைக்கொடூரன் மகிந்த என்றைக்கு புலிகளுடன் பேச்சுவார்த்தைஎன்று சொல்லுவானோ என்று இருக்கு. நல்ல சந்தோஷமான செய்தை வரும்வரை நான் எந்த பதிவும் இடப்போவது இல்லை.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

ஈ ஈ ஈ என இளித்த ஈயம் (இன்ஃபோசிஸ் நாராயன மூர்த்தி நியமனம்.)

ஈ ஈ ஈ என இளித்த ஈயம் (இன்ஃபோசிஸ் நாராயன மூர்த்தி நியமனம்.)
தமிழர்களின் படுகொலை, தமிழ் இளைஞர்கள் சித்திரவதை மற்றும் தமிழச்சிகள் கற்பழிப்பு என்று இந்தியாவின் ஆசீர்வாத்த்தோடு சிங்களர்கள் நடத்தும் கொலைவெறியாட்டத்துக்கு உலக அளவில் எந்த ஒரும் எதிர்ப்பும் இல்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.

இந்தியாவிலும் தமிழ்நாட்டினரைத்தவிற மற்ற மாநிலத்துக்காரர்கள் நடப்பவைகளை கமுக்கமாக மனதுக்குள் ரசித்தவாறு உள்ளனர். பிஜேபியை சேர்ந்த சாரி ஷேஷாத்திரி என்ற நாய் இலஙைத்தமிழர்கள் சிங்கள அரசு சொலவதைத்தான் கேக்கனும் பகிரங்கமாக அறிக்கை விடுகிறான்.

சிங்கள ரானுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்ச்சி கொடுக்கப்படுகிறது மற்றும் ஆயுத மற்றும் ஆள்படை உதவி செய்கிறதுன்னு தமிழக அரசியல் தலைவர்கள் எல்லாம் அலறுறாங்க இந்திய அரசோ அதை மறுத்தும் சொல்லலை அமைதியாக சிங்கள அரசுக்கு ஆசி வழங்கிக்கொன்டிருக்கிறது. வட இந்திய அரசியல் தலைவர்கள் எல்லாம் நாங்கள் எல்லாம் தங்கம் தங்கமாக்குமென்று சொல்லிக்கொண்டிருக்கின்ற வேளையில் தங்கத்துக்குள் இருக்கும் ஈயம் ஈ ஈ ஈ ஈ என இளித்து விட்டது.

ஆமாம் இலங்கை என்ற நாடு இந்தியாவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தலைவர் நாராயன மூர்த்தியை இலங்கைநாட்டுக்கான தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஆலோசகராக நியமித்திருக்கின்றோம் என்று கூப்படு போட்டு அறிவித்து இருக்கின்றது. இலாகாவாரியான ஒப்பந்தங்களை இப்படி அரசாங்கமே மகிழ்ச்சியாக அறிவித்ததன் காரனம் என்னன்னு கூர்ந்து யோசித்தால் விளங்கும். இதில் ராஜ பக்சேயின் நன்றிவிசுவாசம்தான் தெரிகிறது. நான் இந்தியாவில் உள்ள உங்களில் ஒருவரை எங்கள் நாட்டுக்கே ஆலோசனை வழங்கும்மளவுக்கான அறிவாளியாக காட்டியிருக்கின்றேன், உங்களுக்கு திருப்திதானேன்னு கேட்க்கும் தொனிதான் தெரியுது.

இந்த நன்றி விசுவாசம் யாருக்கு? வியாபார ஒப்பந்தங்களை மீறிய தனி நபரை பெருமைப்படுத்தும் இந்த செயல் ஒரு ரகசியத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

இப்படி சிங்க்கள அரசுக்கு தமிழர்களை அழித்தொழிக்கும் செயலுக்கு உதவிசெய்பவர்களை திருப்திப்படுத்தும் நோக்கம் அவர்களை அடையாளம் காட்டிவிட்டது.

இந்தியாவில் முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு இன்ஃபோசிஸ் நாரயன மூர்த்தி ஐயங்கார் மற்றும் சேஷன் ஐய்யர் (முன்னாள் தேர்தல் தலமை அதிகாரி)இவர்கள் இருவரையும் ஒரு கூட்டம் முன்நிறுத்தியது. இவர்கள் இருவரும் உலகளாவிய அறிவாளிகள் இவர்களை இந்திய ஜனாதிபதியாக்கிவிட்டால் இந்தியா உலகின் தலைமை நாடாகிவிடும் என்றெல்லாம் வித்தை வார்த்தைகளால் முன் மொழிந்தனர்.
இதே கூட்டம்தான் இலங்கைதமிழர்களை அழித்தொழிக்கும் கூட்டத்துக்கு அறிவுறை, ஆலோசனை மற்றும் உதவிசெய்யும் கூட்டம் என்பது கொலைக்கொடூரன் ராஜ பக்சேவின் நன்றி விசுவாசத்தில் தெரிந்துவிட்டது.
இந்த கயமைக்கூட்டத்தினால் இந்தியா அழியப்போவது உறுதி.

வியாழன், 5 பிப்ரவரி, 2009

முதுகெலும்பு இல்லாத இந்தியா

அனைத்துலக போர் சட்டவிதிகளை இரு தரப்பும் பின்பற்ற வேண்டும்: அமெரிக்கா, பிரித்தானியா வேண்டுகோள்.

http://www.nerudal.com/nerudal.272.html

முதுகெலும்பு இல்லாத இந்தியா. மற்ற நாடுகளுக்கு இருக்கும் மனிதத்தன்மை இந்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு இல்லையே. உண்மையில் தமிழ்ர்கள் இந்தியாவில் ஒரு அங்கம் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன். கொல்லச்சொல்லுவதே இவர்கள்தாம் இவர்கள் எப்படி இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய சொல்லுவார்கள்?

இவர்களா தமிழ்நாட்டின் நலனை காக்கப்போகிறவர்கள்? சோனியா எந்த தைரியத்தில் ஒட்டுக்கேட்டு தமிழகத்துக்குள் வருவார்?

இந்திரா காங்கிரசுக்கு ஓட்டுப்போடும் மாபெரும் வரலாற்று தவற்றினை செய்து விடாதீர்கள் மக்களே . செருப்பால் அடித்து துரத்துங்கள்.
தயாநிதியின் சொல்கேட்டு மக்கள் தலைவர் போல் அல்லாமல் வியாபாரி போல் நடந்த்துகொள்ளும் கலைஞருக்கும் சரியான பாடம் புகட்டுங்கள்.

புதன், 4 பிப்ரவரி, 2009

கலைஞரின் இக்கட்டான சூழ்நிலை

கலைஞரின் இக்கட்டான சூழ்நிலை புரிகிறது. காங்கிரசுடன் உறவுவைத்துக்கொள்ள அதிமுக துடித்து காத்துக்கொண்டிருக்கு தமிழாக காங்கிரஸ் காரர்கள் பலரும் அதிமுகவுக்கு சேவகம் செய்ய காத்துக்கொண்டு இருக்கிறார்கள் . ஈழத்தமிழர்கள் ஆதரவு நிலை எடுத்தால் கண்டிப்பாக திமுக ஆட்சி காங்கிரசால் கலைக்கப்பட்டுவிடும் , தமிழ்நாட்டு மக்களையும் நம்ப முடியாது, முன்னர் செய்ததுபோல் ஜெயலலிதாவை ஆதரித்து வரவைத்துவிட்டால் என்னசெய்வது?
கலைஞரின் இக்கட்டான சூழ்நிலை புரிகிறது.
சூழ்நிலையின் தீவிரத்தினை குறைக்க, சோனியாவையோ, அல்லது வேறு முக்கியமான காங்கிரஸ் தலைவரை தன்நிலை விளக்கம் கொடுக்க செய்யலாமே. தமிழர்கள் நாதியே இல்லாமல் அழிக்கப்படும்போது நாளை தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் நேர வாய்ப்பிருக்கு அப்பொழுதும் உலகமே வாய்மூடி மௌனமாகத்தானே இருக்கும் என்ற அச்சம் அனைவரின் மனதிலும் இருக்கு.

இலங்கைக்கு அழைப்பு விடுத்த மஹிந்தவிடம், வன்னியிலிருந்து வெளியேறும் மக்களின் வாழ்க்கைக்கு என்ன உத்திரவாதம் செய்திருக்கீர்கள் என்று ஒரு கேள்வியேனும் கேட்டிருக்கலாமே?. 2 பேர், 20 பேர்,அட அல்லது 2000 பேர் என்றால், தீவிரவாதிகள் என்று சொல்லலாம், 3 லட்சம் பேர் என்றால் அது சமூகப்போராளிகள்தானே என்று அர்த்தம் இதை ஏன் உலகார்ந்த அறிவாளிகள் சொல்லமாட்டேன் என்கிறார்கள்?

மஹிந்த இலங்கையில் ஓட்டு வாங்குவதற்கு தமிழர்களை கொல்லுகிறான். அது அனைவருக்கும் தெரிந்ததுதான், கலைஞரும் ஏன் ஒட்டு வாக்குவதற்காக இப்படி பேசுகிறேன் என்று காங்கிரஸை சமாதானப்படுத்தக்கூடாது?

எற்கனவே ஈழத்தமிழர்களால் ஆட்சியிழந்தபோது மக்கள் திமுகாவின் முகத்தில் கரியை பூசி அதிமுகாவுக்கு ஓட்டுப்போட்டார்கள்

அடுத்த‌ தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவினை திமுகவுக்கு அளிக்கத்தயாரா என்று திருமா, ராமதாஸ், நெடுமாறன் ஆகியோரிடம் ஏன் பகிரங்கமாக கேள்வி கேட்க்கக்கூடாது? அவர்களின் வன்டவாளம் மக்களுக்கு தெரியும் அல்லவா?

எப்படியோ தமிழர்களின் தலைவர் இன்னும் தடம் புரளவில்லை என்று காட்டக்கூடிய‌ நிலையில் இருக்கின்றார்

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

முத்துக்குமார், ரவி ஆகியோருக்கான வீரவணக்கக்கூட்டம்

வலைப்பதிவுத் தோழர்களே!

ஈழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்திவரும் சிங்களப் பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிராகவும் அப்பேரின அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்து போரை வளர்த்து வரும் இந்திய ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராகவும் அம்மத்திய அரசிற்குத் துணைபோகும் கருணாநிதியின் தமிழினத்துரோக அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் தீக்குளித்து மாண்டுபோன போராளித்தோழர்கள் முத்துக்குமார், ரவி ஆகியோருக்கான வீரவணக்கக்கூட்டத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4 மணி

இடம் : நடேசன் பூங்கா, தி.நகர், சென்னை.


மேலும் தொடர்புகளுக்கு : 9841354308, 9840903590, 9790948623.

ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.

திங்கள், 2 பிப்ரவரி, 2009

அரக்கி சோனியா காந்தி மனதில் என்னதான் இருக்கு?





நேற்றைய தினத்தில் 12 சிறுவர்கள் உட்ப்பட 56 தமிழ்ர்கள் வன்னியில் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இதைப்பார்க்கும்போது இதையமே வெடிக்கின்றது . இணைத்தளத்தில் பதிவெழுதவே மனசுக்கு கஷ்டமாக இருக்குது.

விடுதலைப்புலிகளை அழிக்கின்றேன் என்று சொல்லி மக்களைத்தான் அழிக்கின்றார்கள். வெளியேறும் மக்களுக்கு வாழ்க்கைக்கும் உயிருக்கும் உத்திரவாதம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகிறான் இலங்க்கைக்கொடுஉரன். இதை இவ்வுலகமே வாய் பொத்தி ஊமையாக வேடிக்கை பார்க்கின்றது.
ஏனென்றே புரியலை. ஒரு சின்ன கண்டனம் கூட வெளியிட மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள் . உலக நாடுகள் போகட்டும் இந்தியாவுக்கு என்ன ஆச்சு?
இந்தியா ஒற்றுமை ஒற்றுமை என்று கத்துராங்களே தமிழ்ர்களுக்கு ஆதரவா மற்ற மாநிலத்தோர் ஒரு வார்த்தை சொன்னால் என்ன?

அரக்கி சோனியா காந்தி மனதில் என்னதான் இருக்கு?

அய்யா அத்துவானி அவர்களே தயவு செய்து தமிழ்ர்களை காப்பற்றுங்கள் நாங்கள் இந்துத்துவத்தை என்ன எந்தத்துவத்தையும் உயிருள்ள வரை பின்பற்றி பாரதிய ஜனதா கட்சியினை தமிழ் நாட்டில் கோவில் கட்டி கும்புடுகிறோம்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

கனடா அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா? - கனடிய பத்திரிகையின் வாக்கெடுப்பு

கனடிய அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா? என்ற தலைப்பிலானா வாக்கெடுப்பு ஒன்றைகனடிய பத்திரிகை ஒன்று ஆரம்பித்துள்ளது.




http://www.citynews.ca/polls.aspx?pollid=4786

சகோதர சகோதரிகளே ஒரு நிமிடம் செலவழித்து நம் உறவுகள் காப்பற்றப்பட உங்கள் வாக்குகளை அளியுங்கள்

சனி, 31 ஜனவரி, 2009

தமிழ்நாட்டு தமிழர்களை ஒழிக்க இந்த உலகம் முற்ப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை

உங்களுக்கு என்ன தீர்வு என்று சொல்லமாட்டோம், எப்படிப்பட்ட வாழ்வுன்னு சொல்லமாட்டோம், எல்லோரும் முல்லைத்தீவைவிட்டு வெளியே வாருங்கள் உங்களையெல்லாம் தனிதனியாக சித்திரவதை , கற்பழிப்பு என்ற பெயரில் கொல்லுகிறோம். அப்படி இல்லையென்றால் குன்டுபோட்டு கொல்லுகிறோம் மொத்தமாக சாவுங்கள் என்று ஒர் கொடூரன் கொக்கரிக்கிறான், அவனை கேட்க்க ஒரு நாதியில்லை.
சே என்ன கருமம் பிடிச்ச உலகம் இது. தமிழர்களை திட்டம்போட்டு அழித்தொழிக்கும் நிகழ்ச்சிக்கு சொந்த விரோதங்களை எல்லாம் மூட்டைகட்டி வைத்துக்கொன்டு ஒற்றுமையாக செயல்படும் காங்கிரஸ், பிஜேபி.
தமிழர்களும் இந்தியர்கள்தானே அவர்களின் உறவுகள்தானே ஈழத்திலும் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொன்னல் குடுமுழுகிப்போய்விடு என்று ஆந்திரா, கர்னாடகா, கேரளவாசிகள் மற்றும் வட இந்தியர்கள்.
எனது ஆந்திர நன்பர் சொன்னார், பிரபாகரன் இந்திய, இலங்கை, சிங்கப்பூர் மலேசிய தமிழர்களை எல்லாம் ஒன்றினைத்து அவர்கள் வாழும் அந்த அந்த நாட்டு பகுதிகளை தனி நாடாகெ பிரித்து அனைத்துக்கும் தலைவனாகனும்ம்னு சொல்லியிருக்கிறாராமேன்னு கேட்டார்.
அடப்பாவிகளா இப்படியா திட்டம்போட்டு கதைபரப்புவீகள். தமிழன் என்றான் ஏன் இத்துனை கசப்பு ஊடகங்களுக்கும்?

அதையும் மீறி உணர்வை காட்ட முத்துக்குமரன் வேன்டியிருக்கு.
முத்துக்குமரா, உன் சாவைக்கூட தமிழர் தவிர எல்லோரும் கேவலமாக பேசுறாங்கப்பா, ஈழத்தமிழர்கள் மீது கரிசனமாக இருக்கின்றோம் ந்னு சொன்னாக்கூட பிடிச்சி உள்ள போடுறாங்க, அதையும் செய்தியாகூட காட்ட மாடேங்குறாங்க. எங்கடா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு இருக்குறது வெளிய தெரியகூடாதுன்னு பDகறுறாங்க, அதையெல்லாம் மீறீ ஆதரவைக்காட்டனும், தமிழ் உணர்வுகளை தட்டிஎழுப்பனும், நமது எண்ணங்கல் கடிதத்தின் வாயிலாக உலகம் பரவனும்ன்னு செஞ்ச காரியம், உன்மையில் மகத்தானது. விடுதலைப்போராட்ட வீரங்களுக்கு சற்றும் குறைவில்லாதது. நீ வாழ்க , உனது வீரம் இவ்வுலகில் தமிழர்கள் உள்ள வரை அவர்கள் தம் நெஞ்சங்களில் இருக்கும்.

ஒரு பிரபாகரன் உருவாக்கபட்டதன் காரணத்தயே மறந்து மீன்டும் மீன்டும் ஓராயிரம் பிரபாகரன் களை உருவாக்காமல் விடமாட்டார்கள் இவர்கள்.

தமிழர் விரோத ஊடகங்கள்தான் இப்படிச்செய்கின்றன என்றால், தினகரன் கூட இப்படி செய்கிறதே. கலைஞரை நம்மி பிரயோசனமே இல்லை, யார் மீதும் நம்பிக்கை இல்லை. இலங்கைக்கொடூரன் அறிவித்த இரண்டு நாள் தவனை முடிந்துவிட்டது, என்ன ஆகுமோன்னு துக்கம் தொன்டையை அடைக்குது.
தமிழர்களுக்கு இதையெல்லாம் செய்கிறேன், இதுக்கு பிரனாப்முகர்ஜி, சோனியா, தங்கபாலு,பெரியாரின் பேரன் இளங்கோவன் இவர்கள் எல்லாம் சாட்சின்னு அந்த இலஙைக்கொடூரன் சொல்லட்டும், பார்க்கலாம். அப்படி தமிழர்கள் நலன் உறுதி செய்யப்படும் பட்சத்தில், புலிகள் ஏனப்பா ஆயுதத்தை தூக்கப்போகிறார்கள்? அந்னேரத்தில் என் தலைவன் பிரபாகரன் இன்முகத்தோடு தன்னுயிரைத்தருவான்.

எனது முந்தைய பதிவில் சொன்னதுபோல தமிழ்நாட்டு தமிழர்களை ஒழிக்க இந்த உலகம் முற்ப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

செவ்வாய், 27 ஜனவரி, 2009

மயானமாகிப்போகும் கிழக்குமாசி வீதிகளும் ரங்கநாதன் தெருக்களும்

தினமும் நெருடல், புதினம், தினக்குரல், தமிலிஷ் மற்றும் தமிழ்மணம் இனைத்தளங்களை பார்த்து பார்த்து ஏங்கி ஏங்கி இன்று ஏதாவது நல்ல மகிழ்சியான செய்தி வராதா என்று ஏமாந்து போயிக்கொன்டே இருக்கின்றேன். மனது கன‌க்கின்றது. ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க இவ்வுலகத்தில் எவருமே இல்லை.
சோனியாவின் கல் மனது கரையவே கரையாது போல இருக்கு. கலைஞர் ஏன் இப்படி வழ வழா கொழ கொழாவாகிப்போனார் என்றே தெரியலை. எத்துனை வருடம் ஆட்சியில் இல்லாமல் இருந்திருக்கின்றார், தமிழர்களிக்காக ஆட்சியை துறந்தால்தான் என்ன?
இல்லை விடுதலைப்புலிகள் மற்றும் ஈழத்தமிழர்கள்மீது இந்த தவறுகள் எல்லாம் உள்ளன, அதனால் நான் இதையெல்லாம் செய்யமுடியாத சூழ்நிலையில் இருக்கின்றேன் என்றாவது சொல்லலாமே?
சந்தோஷம் பிடுங்கப்பட்டு, வசந்தத்தை தொலைத்துவிட்டு வெறுமையில் இருக்கும் ஈழத்தமிழர்களின் நிலை தமிழ்நாட்டுக்கும் வரும் காலம் தொலைவில் இல்லையென்றே எனக்கு தோன்றுகின்றது. கிழக்குமாசி வீதிகளும், ரங்கநாதன் தெருக்களும் புல் பூன்டு நிறைந்த காடாகும் காட்சி என் கண்களுக்கு தெரிகின்றது. அப்பொழுதும் இருப்பதைவைத்துக்கொன்டு உயிர்வாழந்தால் போதுமென்று ஒட்டிக்கொன்டிருக்கும் தமிழர்களை க்கன்டு இந்த உலகமே சந்தோஷமாக இருக்கும் காட்சியும் எனக்கு தெரிகின்றது.
வாழ்க உலகம்.

வெள்ளி, 23 ஜனவரி, 2009

இந்தியா ஒரு பயந்தாங்கொள்ளிநாடு

நிலமை சரியாகவே இல்லை மேலும் மேலும் மோசமாகத்தான் போயிக்கொன்டு இருக்கின்றது. ஈழத்தமிழர்களைப்பற்றித்தான் சொல்லுகிறேன்.

விடுதலைப்புலிகள் ஏன் இப்படி பின்வாங்கி ஓடுகின்றனர் என்று புரியாத புதிராகத்தான் இருந்தது, மனதுக்கும் கலக்கமாக இருந்தது. சந்தோஷமாக பதிவுகள் இடக்கூட மனது வரமாட்டேன் என்கிறது.

நாங்கள் களத்தில் செம்மையாக பணியாற்றுகிறோம் அனைத்தையும் உடைத்து கூறமுடியாது என்ற புலிகளின் செய்தியை கன்டு மனம் சற்று நிம்மதி கொள்கிறது.
புலிகளின் செய்தியினை இங்கே கானவும் http://www.youtube.com/watch?v=kXNSLfGUrTk

மகிந்தவின் போருக்கு ஜப்பான் ஆதரவு என்று செய்தி நெருடல் இனையத்தில் படிக்க நேர்ந்தது, தமிழர்களை ஒடுக்க உலகமே ஒன்றுபட்டு உழைக்கின்றன.

ஜப்பானில் இருந்த காலத்தில் எனக்கு இரண்டு ஈழத்தமிழ் நன்பர்கள் இருந்தனர், நான் தங்கியிருந்த மேன்ஷனிலேயே இருந்தனர். நான் அவர்களிடம் சென்று வாஞ்சையுடன் பேசிக்கொன்டிருப்பது வழக்கம். அவர்களது குடும்பத்தில் ஒவ்வொருவரும் உலகத்தின் ஒவ்வொரு மூலையில் இருப்பதை யும், நான் குடும்பத்தைவிட்டு தனித்து இருப்பதையும், குடும்பத்தோடு இருந்த காலத்தினை சிலாகித்து பேசிக்கொன்டு இருப்போம். ஈழத்தமிழர்களின் சுத்தமான தமிழ் பேச்சினை ரசித்துக்கேட்ப்பது எனக்கு நிரம்பவும் பிடிக்கும். ஒருமுறை அந்த ஈழ நன்பர் என்னிடம் பேசிக்கொன்டு இருக்கும்போது
"நீங்கள் யாரிடம் கதைத்துக்கொன்டிருக்கின்றீர்கள் என்று தெரியுமா? பிரபாகரனின்ட மகனிடமாக்கும்" என்றார் அதைக்கேட்டு எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. பிறகு சொன்னார் பகடிக்காக அப்படி கதைத்தேனென்று.

பத்திரிக்கைகள் எல்லாம் தலையங்கத்தில் எழுதுகின்றன, சிவசங்கரமேனன் போனது, போய் சிங்கள ரானுவத்தை பாராட்டிவிட்டு வந்தது, பிரனாப் போகாதது தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் ஆர்வல தலைவர்களை இந்திய அரசு கேனையர்களாக நினைத்துக்கொன்டிருப்பதை.

ஆனந்தவிகடனில் கீழ்கன்டவாறு தலையங்கம் எழுதப்பட்டு இருக்கு

"செருப்பால் அடித்துவிட்டுக் கருப்பட்டி கொடுக்கும் அசிங்கத்தைக் கூசாமல் செய்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு. நொந்துபோன இதயங்களில் மறுபடி கூர் வேல் பாய்ச்சி இருக்கிறது.

அப்பாவித் தமிழரின் நலன் காக்க, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் இலங்கை செல்வார் என்று தொடர்ந்து வெளியாகிவந்த செய்திகள் எதிர்பார்ப்பு கலந்த ஆறுதலை அளித்தன. அமைச்சருக்கு அப்படி என்னதான் 'தலைக்கு மேல்' வேலையோ... அவருக்குப் பதிலாக, வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனனை மத்திய அரசு அனுப்பிவைத்ததே பெரிய தவறு!

கண்டியில் ராஜபக்ஷேவைச் சந்தித்தபோது, 'யுத்தத்தின் பெயரால் தமிழர்களைக் கொன்று குவிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று சிவசங்கர் மேனன் சொல்லவில்லை. மாறாக, 'போர்ச் சூழலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு நிவாரண உதவிகள் அளிக்கும்' என்று மோசமான ஒரு வாக்குறுதியை அளித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

பாலஸ்தீனத்து மக்களின் மீது குண்டு வீசக் கூடாது என்று நான்கு தடவை இஸ்ரேலைக் கண்டிக்கத் தெரிந்த மத்திய அரசுக்கு, கூப்பிடு தொலைவில் நடக்கும் அநியாயத்துக்கு எதிராகக் குரல் உயர்த்த மனம் இல்லாதது எத்தகைய கொடுமை!

'இந்தியாவின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். எனவே, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது' என்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்றால், அதை வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன தயக்கம்? 'இல்லை, இல்லை... ஈழத் தமிழர் அனைவரும் எங்கள் தொப்புள்கொடி உறவு. அவர்கள் துன்பத்தைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்' என்பதே உண்மையான நிலைப்பாடாக இருந்தால், உடனடியாக இலங்கை அரசின் சிண்டைப் பிடித்துக் கண்டிக்க வேண்டாமா?

நாட்டுப் பாதுகாப்பும் முக்கியம், ஓட்டுப் பிச்சை வாங்குவதும் முக்கியம் என்ற வழவழா கொழகொழா அணுகுமுறை காரணமாக நாடகமாடுவதும் நாட்களைக் கடத்துவதுமே தொடர்ந்தால்... மத்திய அரசின் மீதான நம்பிக்கை அற்றுப்போய், அதுவே நம் உள்நாட்டு அமைதிக்கும் வேட்டாகிவிடும்!"



இதையெல்லாம் பார்க்கும்போது இந்தியா ஒரு பயந்தாங்கொள்ளிநாடு என்ற சிந்தனை வருது.
ராஜீவ்காந்த்தியினை ஒரு சிங்களன் துப்பாக்கியால் தாக்கியதை பார்த்தாலே தெரியும் சிங்களர்கள் இந்தியா மீது எத்துனை கடுப்பா இருக்கின்றனர் என்று. ஈழத்துக்கு ஆதரவாக ஏதாவது பேசினால், இலங்கை சரத் பொன்சேகா சோனியாவை கோமாளி என்று சொல்லுவார், மஹிந்த மிக கேவலமாக மன்மோகனிடம் சவால் விடுவார், அதை எதிர்த்து எதுவும் சொல்லமுடியாது. இப்படி ஒரு நிலமை வந்தால் இந்திய அரசாங்கத்துக்கு கையாலாகாத அரசுன்னு பேர் வந்துடும். அதுக்கு பயந்துதான் இப்படி மொழுகுகின்றனர். தமிழர்கள்தானே அவர்கள் கேவலமாக பேசமாட்டார்கள், பன்பு பாசம் ன்னு போயிடுவாங்க அதுனால தமிழர்கள் செத்தால் சாகட்டும்னு சிங்களத்துக்கு சிங்கியடிக்கிறாங்க.

செவ்வாய், 6 ஜனவரி, 2009

சோனியா கந்த்தி ஒரு அரக்கி

குளிர்கால விடுமுறைதினத்தை பயனுள்ள வகையில் கழிக்கவேன்டும், குடும்பத்துடன் ஓரிரு இடங்களுக்கு சென்றுவரலாம் என்று இருந்த நேரத்தில். எதிர்பாராதவிதமாக காலிலும் தலையிலும் அடிபட்டு 10 நாள் படுத்தபடுக்கையாக இருக்க நேரிட்டுவிட்டது. அதற்க்குள் ஏகப்பட நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லக்கூட மனம் வரவில்லை.

உலகநாடுகளின் பண, ஆயுத மற்றும் ஆள் பலத்துடன் இலங்கை தமிழர்களின் வாழ்வினை பறிக்கும் நிகழ்ச்சி தமிழர்விரோதகாரர்களின் மனம் போலவே நடந்துவருகின்றது. தங்களுக்கென்று வரைமுறை வைத்து தங்களுக்குள்ளேயான நிர்வாகத்தால் வாழ்ந்துகொன்டிருந்த வடக்குப்பகுதி தமிழ்மக்கள் உலகச்சிறப்பு பெறுவதை பொறுக்கமுடியாத, சிங்களர்களும் தமிழர்கள் அல்லாத மற்ற உலகத்தீரும், அவர்களை அடித்து விரட்டிய வண்ணம் இருக்கின்றனர்.

ஒரு லட்சம் பேரை மனித கேடையமாக பிடித்து வைத்திருக்கின்றார்கள் விடுதலைப்புலிகள் என்று உலகத்தோர் கூக்குரலிட்டு தமிழர்பகுதிகளை கொலைக்களமக்கினர். இப்பொழுது கிளிநொச்சிக்கு சென்று அங்கு யாருமே இல்லாததைப்பார்த்து விடுதலைப்புலிகளும் மக்களும் ஒன்றுதான் என்பதை உலகம் உணர்ந்துகொள்ளுமே என்று பயந்து நம்ம ஊர் தினமல்ர் பத்திரிக்கை உலக மகா ஜோக்கான செய்தியினை வெள்யிட்டு உள்ளது.

விடுதலைப்புலிகள் ஒரு லட்சம் மக்களையும் கேடையமாக பிடித்துக்கொன்டு முல்லைத்தீவு மற்றும் யானையிறவு பகுதிக்குள் சென்றுவிட்டனராம்.

அடப்பாவிகளா ஒரு இனத்தையே கூன்டோடு அழிக்கும் செயலினைக்கண்டித்து தமிழர்கள் தவிற யாருமே கருத்துசொல்லவில்லையே இந்த உலகத்தில்.

இந்நிலையில் சோனியா காந்தியினை என்னன்னு சொல்லுவது?
பதவிக்கக தமிழர்களை அடகுவைத்த தமிழக காங்கிரஸ் காரர்களையும் திமுக மற்றும் பாமக காரர்களையும் என்னன்னு சொல்லுவது.

சோனியா கந்த்தி ஒரு அரக்கி
தமிழக காங்கிரஸ், திமுக மற்றும் பாமக காரர்கள் கையாலாகத வர்கள், பதவிக்காக டெல்லி காங்கிரஸின் அடிவருடுபவர்கள்


ஏதோ பாஜக கொஞ்சம் மனம் மாறி தமிழர்களின் ஆதரவினை பெறும் நோக்கில் ஆதரவான பேச்சுக்களை ஆரம்பித்து இருப்பது வரவேற்க்கத்தக்கதே.