திங்கள், 10 செப்டம்பர், 2007

தமிழ் வலைப்பூக்களுக்கு நேர்ந்த கதி

தமிழ் வலைப்பூக்களுக்கு இந்த கதி நேரும் என்று யாருமே நினைக்கலை. இறண்டு பிரிவாக பிரிந்துகொன்டு அடித்துக்கொன்டு நாறுகிறார்கள். சிலர் இரன்டிலும் சேர்த்தியில்லாமல் தனியாக இருக்கிறார்கள்.

ஐய்யமாருங்க ஒரு குழு தமிழர்கள் மற்றொரு குழு.

பெரும்பாலானோர் நடுநிலையாக இருந்தாலும் எதோ ஒரு விதத்தில் பிராமணர் அல்லது தமிழர் குழுவுக்கு ஆதரவு தருபவராய் இருப்பார். இதில் உணர்ச்சி வேகத்தில் தனது உண்மையான அடையாளங்களுடன் பதிவுகளை ஆரம்பித்து அடிவாங்க ஆரம்பித்தவுடன் நிலமையை உணர்ந்து அடடா தப்புப்பன்னிட்டோமேன்ன்னு முகமூடி போட ஆரம்பித்துவிட்டனர். கவிதா அவர்களின் அனுபவமோ வித்தியாசமானது, மிக அழகான முறையில் ஆரம்பித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஒரு பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாக பேசப்போய் என்ன அச்சோ தெரியலை பாவம் ஏகப்பட்ட அனாமத்து வசவுகள் கிடைத்திருக்கும் போல, கருத்திடலையே தூக்கிவிட்டார், பிறகும் என்ன ஆச்சோ தெரியலை தனது வலைப்பூத்தளத்தையே அழைப்பின் பேரில் வருபவர்கள் மட்டும் பார்க்கும் வன்னம் மாற்றிவிட்டார். இதுபோல எத்தனை கவிதாக்கள் எத்தனை வகையான அதிர்ச்சி அனுபவங்களை பெற்றார்களோ?

ஒருசிலர் தங்களது அடையாளங்களை கொடுத்துவிட்டு மற்றவர்களால் திட்டப்படும்போது அதையெல்லாம் கன்டுகொள்ளாமல் எதிர்ப்புகளை சட்டை செய்யாமல் கருமமே கண்ணாய் தங்கள் பதிவுகளை தொடர்கிறார்கள்.

ஒரு சில தமிழர்கள் இதன்மூலம் வியாபரம் செய்யும் நோக்கில் எதிர்நிலையில் இருப்போரையும் அரவனைத்து போகும் சூழ்நிலை ஏற்ப்படும் போது கோடாலிக்காம்பு பட்டம் பெறுகின்றனர். (காசி மற்றும் ஓசை செல்லா இந்த வகை என்று நினைக்கின்றேன்).

நடுநிலையாளர்களின் பதிவுகளைப்பார்த்தால்
கவிதைகள்
கதைகள்
திரைப்பட விமர்சனங்கள்
திரைப்பட பாடல்கள்
சிரிப்புத்துனுக்குகள்
தங்களது கடந்தகால நிகழ்கால அனுபவங்கள்
செய்திகள்ப்ற்றிய தங்கள் கருத்துக்கள்
பிறர்பதிவுகளைப்பற்றிய கருத்து ஆய்வு

இப்படிப்பட்ட பதிவாளர்கள் எதேனும் ஒருவிதத்தில் கீழ்கண்ட எதோஒரு விஷயத்தில் சார்ந்திருந்தாலோ இல்லை ஒருகுழுவினை சேர்ந்தவரை ஆதரித்து பின்னுட்டமிட்டாலோ அவர் குறிப்பிட்ட அந்தகுழுவினை சேர்ந்தவராகிறார்.

ஐய்யமாருங்க பதிவுகளைப்பார்த்தால
சோ புகழ்ச்சி.
சங்கராச்சாரியார் புகழ்ச்சி
ராமகோபாலன் புகழ்ச்சி
குருமூர்த்தி புகழ்ச்சி
பிஜேபி புரானம் (நாட்டை ஈடேற்ற பிஜேபியால் மட்டும்தான் முடியும்)
பெரியார் இகழ்ச்சி
ராமர்பாலம் எதிர்ப்பு
இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு
காவிரி, பெரியார், சேலம் ரயில்-கோட்டம் பற்றி மூச்
உழைத்துப்பிழைக்கும் தமிழர்களின் வியாபாரமூலங்களை வடஇந்திய மற்றும் வெளிநாட்டு வியாபாரிகள் சர்வாதிகாரமாக அபகரிப்பதை நமட்டுச்சிரிப்புடன் வறவேற்றல்
சமஸ்கிருத மொழியின் பெருமை
வேதங்களின் புகழ்ச்சி
தமிழ் அர்ச்சனை க்கு அர்ச்சனை


தமிழர்கள் பதிவுகளைப்பார்த்தால்
ஐய்யமாருங்க எதிர்ப்பு
ராமர் பாலத்தை எதிர்ப்பதை கண்டித்து கருத்துக்கள்
இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக, மற்றும் எதிர்ப்புகளை கண்டித்து கருத்துக்கள்
கால காலமாக கல்வி மறுக்கப்பட்டதை நினைத்து வெம்பி வேதனைப்பட்ட கருத்துக்கள்
இன்னமும் தமிழர்களின் உரிமை பலவிதங்களில் மறுக்கப்படுவதை கன்டு இயலாமையின் ஆற்றாமையில் கருத்துக்கள்.
தமிழர்கள் கோவிலை ஆக்கிரமித்துக்கொன்டு தமிழ் அர்ச்சனைசெய்யவிடாமல் தடுக்கும் ஐய்யமாருங்களின் எதேச்சதிகாரத்தின் போக்கினை கன்டித்து.
பெரியார், காமராஜர் மற்றும் கலைஞரின் கைங்கரியங்களை சிலாகித்து.

என்னைப்பொருத்த வரைக்கும் பொது வாழ்வுக்கு வந்தவர்கள் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள் ஆவர். புகழ்ச்சிகள், இகழ்ச்சிகள், பாரட்டுக்கள் எதிர்ப்புகள், வாழ்த்துக்கள் வசவுகள் எதுவேண்டுமானாலும் கிடைக்கும். நடிகர்கள், அரசியல்வாதிகள். எழுத்தாளர்கள், பாடல் ஆசிரியர்கள், மற்றும் அனைத்து கலைஞர்களும் பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள் ஆவர். அதுபோலத்தான் வலைப்பதிவாளர்களும், யாரொருவர் தனது அடையாளத்தை வெளிக்காட்டியவாறு கருத்து சொல்ல ஆரம்பிக்கின்றாரோ அவர் பொதுவாழ்க்கைக்கு வந்தவர் ஆவர். அப்படி வந்தபிறகு ஐயோ அப்பா இப்படி திட்டுறானே, இது அடுக்குமா ன்னு கதறுதல் வேலைக்கு ஆகாது. அடையாளத்தை வெளிக்காட்டி ஆதாயம் பெற்று பிரபலமாக நினைக்கும்போது இவைகள் தவிர்க்கமுடியாதது. இப்படி எதிர்க்கிறார்களே இப்படி எதிர்க்கிறார்களேன்னு கத்துறவுகளை கேட்க்கிறேன், இப்படி எதிர்க்கப்படும் அளவுக்கான கருத்துக்களை பதிந்தே ஆகனுமா?

என்னைப்பற்றித்தெரிந்திருக்கும் நான் தமிழர் குழுவைச்சேர்ந்தவன்.

கருத்துகள் இல்லை: