செவ்வாய், 23 அக்டோபர், 2007

அன்பு என்றால் என்ன?

நீ என்னைப்பார்த்து அன்பு என்றால் என்னவென்று கேட்டாய் அதை என்னால் சொல்லமுடியாது பிரிந்து இருந்து பார்த்தால்தான்தன் ஆழம் தெரியும் வெளிப்படையான அன்பு கூட நாம் இருக்கும் நாள் வரைதான். ஆனால் உன்மையான அன்பு என்பது ஏழு ஜென்மம் எடுத்தாலும் மறையாது. உன்னைப்பற்றி சாகும் சில மணி நேரத்துக்கு முன்னால் அறிந்துகொன்டேன். காலையில் நீ கூறிய வார்த்தைகள் எவ்வளவு வேதனை ஏற்ப்படுத்தியது தெரியுமா? அது உனக்கு எப்படி தெரியும் இவள் இல்லையென்றால் இன்னொருவள் என்று வாழ்ந்த உனக்கு அன்பு என்றால் என்னவென்று தெரியுமா? நீ இவ்வளவு நாள் கேவலமான எண்ணத்தோடு பேசிக்கொன்டிருக்கின்றாய் என்பதை தெரிந்துகொன்டேன். இவ்வளவு நாள் எதற்க்காக என்னிடம் பேசிக்கொன்டிருந்தாய் என்பதையும் புரிந்துகொன்டேன். நீ கூறிய வார்த்தைகள்னைத்தையும் இன்னொருத்தி உனக்கு கண்டிப்பக கூறுவாள். உண்மையான நன்பர்கள் எனக்கு கிடைக்க மாட்டார்கள் என்று சொன்னாய் ஆனால் எனக்கு பலபேர் கிடைத்தார்கள் உனக்குதான் அதற்கு கொடுத்து வைக்கல, எனக்கு எல்லா இடத்திலும் அன்பு கிடைத்தது. வயது கோளாறால் உன் அன்பை எதிர்பார்த்தேன். நீ இன்று கூறிய வார்த்தைகளால் பாதி உயிர் போனது உன்னை பார்க்கும்போதெல்லாம் மீதி உயிர் போய்க்கொன்டே இருக்கின்றது. உண்மை தெரியும்போது நீ கண்டிப்பாக வருத்தப்படுவாய். நான் இதுவரை வீட்டில் என் துனியைக்கூட துவைத்ததில்லை. ஆனால் தினம் தினம் உன் துணியை துவைத்தேன். அதை எல்லாம் நினைக்கும்போது மனம் எவ்வளவு வேதனை அடைகிறேன் தெரியுமா? உன்னிடம் வேறு ஏதாவது எதிர்பார்த்தேனா?.

இது என்ன என்று பார்க்கிறீர்களா? எதாவது சினிமா வசனமோ? இல்லை எதாவது ஒரு கதை புத்தகத்தின் ஒரு பகுதியோ? இல்லை நாடகத்தில் வரும் உரையாடலோ?

எதுவும் இல்லைங்க. ஒரு 17 வயது பள்ளி மாணவியினுடைய நாட்குறிப்பின் ஒரு பக்கம்தான் இது. தனது தோழியைப்பற்றி எழுதியிருக்கின்றார். எப்பேர்ப்பட்ட பக்குவமான மன நிலை தெரிகிறது பாருங்கள், பாவம் அன்புக்காக ஏங்கி தவித்து கிடைக்கமல் துயருற்று, கிடைத்ததும் பொய்யாய் போய் அதானால் உடைந்துபோன மனத்தில் சோகம் இழையோடுவது பட்டவர்த்தனமாக தெரிகின்றது.

பாவம் இந்த இளமொட்டு 17 வயதிலேயே கருகிவிட்டது. ஆமாம், 2007 அக்டோபர் மாதம் 23 ம் நாள், சோகத்தின் துயர் தாங்காமல், உன்மையான அன்பை உதாசீனப்படுத்திய இந்த கேவலமான உலகத்தில் இருக்கப்பிடிக்காமல் தனது வகுப்பறையிலே தூக்குமாட்டி இறந்துபோனார். காடலூர் புதுப்பளையம் பள்ளியைச்சேர்ந்தவர். இறப்பதற்கு முன்பு தனது தோழிகளுக்கும் பெற்றோர்களுக்கும் 53 பக்கங்களில் கடிதம் எழுதிவைத்து விட்டு இறந்து போயிருக்கின்றார். அதில் ஒருபகுதியைத்தான் "தமிழ் முரசு" மாலை நாளிதழில் வெளியிட்டு இருக்கின்றார்கள்.

அன்பு என்ற கண்ணுக்கு புலப்படாத வஸ்துவைப்படைத்த கடவுளை குறை சொல்லுவதா?
அன்புக்கு அடிமையாகும்படிக்கான பலகீனமான இதயத்தைக்கொன்ட மணிதனைக்குறை சொல்லுவதா?
உன்மையான அன்பை புரிந்துகொள்ளாமல் சுயநலமே பெரிதென்று செயற்ப்படும் உலகத்தை குறைசொல்லுவதா?

கருத்துகள் இல்லை: