செவ்வாய், 30 அக்டோபர், 2007

அனுசக்தி ஒப்பந்தம் சரியா தவறா?

தற்பொழுது இந்தியாவின் அன்னியச்செலாவணியின் இருப்பு எக்குத்தப்பாக உயன்ர்ந்துகொன்டே இருக்கின்றது. உலகெங்கும் உள்ள இந்தியர்கள் அந்நாட்டு பணங்களை (குறிப்பாக அமெரிக்கவிலிருந்து) அனுப்பிக்கொன்டேஐருக்கின்றார்கள். வெளிநாட்டு ப்பனம் வந்து குவிந்தவண்ணம் உள்ளது. அதையெல்லாம் மீன்டும் கைப்பற்ற என்ன வழிகள் உள்ளதோ அனைத்தையும் நரித்தனமாக செய்துகொன்டிருக்கின்றது அமெரிக்கா. அதில் ஒன்றுதான் அனுசக்தி ஒப்பந்தம், நமது இந்தியாவில் கிடைக்கும் மூலப்பொருட்க்களைக்கொன்டே அனுசக்தி தேவைகளை சமாளிக்கலாம், இல்லை ரஷ்யாவிடம் பெறலாம். இத்துனைகாலம் ஆஸ்திரேலியாவிடம் இருந்துதான் பெற்றுக்கொன்டிருந்தோம், அமெரிக்காவின் நரித்தனத்தால் தற்பொழுது ஆஸ்திரேலியா தரமறுக்கின்றது. மேலும் உலகெங்கும் அனுஉலைகளினால் பாதிக்கப்பட்ட நாடுகள் அனூலைகளை மூடியவண்ணம் உள்ளன, அமெரிக்காவின் அனு-உலை வியாபாரம் எங்கும் போனியாகவில்லை, இளிச்சவாய் நாடான இந்தியாமட்டும் பல்லிளித்துக்கொன்டு இருக்கின்றது. இந்த ஒப்பந்தம் மட்டும் அமலானால் தேவையில்லாமல் அளவுக்கதிகமாக பனம் அமெரிக்காவுக்கு கொடுக்கவேன்டியிருக்கும். அவர்களது தொழில் நுட்பத்தைமட்டும் விலைகொடுத்து வாங்கனும் வேறு யாரிடமோ பெற்றால், கடுமையான அபராதப்பணம் கட்டனும் மேலும் உதவிகளும் ரத்து செய்யப்படும்.
ஆயுதங்களுக்கு அனுசக்தியை பயன் படுத்தக்கூடாது பயன் படுத்தினால் கடுமையான அபராதப்பணம் கட்டனும் மேலும் உதவிகளும் ரத்து செய்யப்படும். பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் அச்சுறுத்துதலை தவிர்க்க அனு ஆயுத ஆராய்ச்சிப்பணிகள் அவசியம்.

உலகளாவில் இந்தியாவிலும் சீனாவிலும்தான் தற்போது வாங்கும் சக்தி அதிகமாக இருக்கின்றது. 30 வயதுக்குட்பட்டோர் 60% இருக்கின்றனர், மேலும் அபரிதமான அந்நியப்பனம் கையிருப்பாக இருக்கின்றன. அதை கபளிகரம் செய்ய கழுகுகளும் நரிகளும் வட்டம் போட்டுக்கொன்டே இருக்கின்றன.

வால்மார்ட் என்ற அமெரிக்க நிறுவனத்தை இந்தியாவைல் அனுமதிக்கும்படி நிர்ப்பந்தப்படுத்திக்கொன்டே இருக்கினறது. அது மட்டும் வந்தால் இந்தியாமுழுது கடை விரித்து பணத்தையெல்லாம் வாரிச்சுருட்டிக்கொன்டு அமெரிக்கவிற்கே திரும்பி வாரிச்சென்றுவிடுவர். இதுதான் கதை.

நமது இந்திய அரசாங்கமோ அபரிதமான அந்நியப்பணத்தை கையில் வைத்துக்கொன்டு நல்லதொரு நலத்திட்டங்களை செயற்ப்படுத்தாமல், பெரிய தொழிலதிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடன் கொடுத்து அவர்களை மேலும் பணக்காரர்களாக்கும் வட்டித்தொழிலில்தான் கருத்தாய் இருக்கின்றது.

கருத்துகள் இல்லை: