திங்கள், 6 அக்டோபர், 2008

மனச்சிக்கல்

உயர்வு மனச்சிக்கல் (Superiority complex)

உயர்வு மனச்சிக்கல் என்பது தாழ்வு மனோபாவத்தில் இருப்போர்களால் அத்தாழ்வு மனோபாவத்தை மறைக்க அல்லது அதிலிருந்து தப்பிக்க அவர்களையறியாமலே உன்டாக்கிக்கொள்வது என்று மனவியல் வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Superiority_complex


வலைப்பதிவுலகில் நாந்தான் பெரியவன், என் சாதிதான் பெரியதுன்னு சொல்லுவதில் அப்படி என்ன ஆனந்தமோ ஒருசிலருக்கு.
மற்றவர்களெல்லாம் விட நான் பிறப்பால், ஆற்றலால் உயர்ந்தவன் என்று சொல்லுவதில் அவர்களின் மனநோய்தான் தெரிகிறது. மற்றவர்கள் எல்லாம் நம்மை விட உயர்ந்துகொன்டுஇருக்கும்போது நமது மனத்துள் இருக்கும் சஞ்சலத்தை விரட்டியடிக்க அல்லது நான் அப்படி இல்லை என்று அவர்களை அவர்களேஏ ஏமாற்றிக்கொள்ள, அவர்களையறியாமலே இப்படியெல்லாம் சொல்லிக்கொள்வர்.

இப்படி அவர்கள் சொல்லிக்கொள்ளுவது, நான் உயர்ந்த இடத்தில் இருக்கின்றேன் என்ற‌ சுயஊக்கத்துக்கு வேன்டுமானால் பயன்படலாம்.

ஆனால் மற்றோருக்கு முன்னால் அப்படி சொல்லும்போது மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்று சொல்லுவது போலத்தான் ஆகும். இதனால் சமூகத்தில் அவர்களது நற்ப்பண்புகள்தான் சிதையும். அதுக்கெல்லாம் கவலையில்லை என்று சொல்லுவதுதான் அந்த மனவியாதியின் உச்சம்.

பார்ப்பன ஜாதியில் பிறந்த ஒருவரின் பிறப்பைபற்றிய பெருமிதத்தைப்பாருங்களேன்.
பார்ப்பனன் என்று சொன்னால் விரட்டுகிறார்களாம், அதையெல்லாம் மீறி நான் பார்ப்பனன் என்று சொல்லி வீரமாக இருக்கிறாராம் அவர்.

http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html


அடுத்தது.

வலைப்பதிவர் ஒருவர், எழுத்தாள‌ர் ஒருவரை வலைப்பதிவர் சந்திப்புக்கு அழைத்திருக்கிறார். உடனே அந்த எழுத்தாளர் கொதித்து எழுந்துவிட்டார். அதெப்படி என்னை yaahoo messenger வழியாக அழைக்கலாம்? நான் என்ன அவ்வுளவு கேவலமானவனா?

அழைத்தவர் லக்கிலுக்
அழைக்கப்பட்ட எழுத்தாளர் : சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா கொதிப்பு: http://charuonline.com/oct08/Rajinikanth.html

லக்கி லுக்கின் தன்விளக்கம்: http://www.luckylookonline.com/2008/10/blog-post_06.html

எனக்கு இங்கும் சாருநிவேதிதாவிடம் உயர்வு மனச்சிக்கல்தான் தெரிகிறது. அபார உயர்வு மனச்சிக்கல் தான்.
சாரு நிவேதாவுக்கு ஒரு சில கேள்விகள்.

1). அரட்டைப் பெட்டியில் கடவுளே வந்து முகமன் கூறினாலும் நான் கண்டு கொள்ள மாட்டேன்.

அப்புறம் ஏன் அரட்டைப்பெட்டியை உங்கள் கணணியில் வைத்திருக்கீர்கள்? கடவுளையும் கன்டுக்கத நீங்கள் லக்கியை கன்டுகொன்டதால் லக்கி அவர்கள் கடவுளுக்கும் மேலே அதையும் தான்டி புனிதமானவர் என்று நினைத்ததாலா?

2). யெஸ், டெல் மீஎன்று சொல்லித் தொலைத்து விட்டேன். அதன் பலன் கை மேல் கிடைத்தது.
கூட்டத்துக்கு அழைப்பது என்ன அப்படி இழிவான செயலா? இல்லை தேச குற்றமா? வலைப்பதிவுலகுக்கு வந்து விட்டீர்களே அப்புறம் என்ன? இங்கு எல்லோரும் சமம் தானே?.

3). தலைக்கு மேல் ஏறிக் கொண்டு நம்மைக் கழுதை மேய்க்கப் பார்க்கிறார்கள்
வைப்பதிவர் சந்திப்பை கழுதைமேய்ப்பது என்று சொல்லுகிறீர்களா இல்லை அதில் கலந்துகொள்ள அழைத்ததை கழுதைமேய்ப்பது என்று சொல்லுகிறீர்களா ?

4). பதிவர்கள் கூட்டத்திற்கு ரஜினிகாந்தையும் அழைத்திருக்கிறீர்களா? அப்படியானால் நானும் வருகிறேன். சரியா?
உங்களை ரஜினிகாந்துக்குஇனையாக நினைத்துகொன்டிருக்கிர்களா? இல்லை ரஜினிகந்த்துக்கு இனையிட்டு யாறேனும் சொல்லியிருக்கிறார்களா? தற்புகழ்ச்சி என்பது இதுதானோ?

5). தினமலரில் அந்துமனியாக எழுதுவது நீங்கள்தான் என்று கேள்விப்பட்டேன் நிஜமா?

==========================================================

லக்கியின் அந்தப்பதிவுக்கு, முகம் காட்ட வெட்க்கப்படும் ஒருவர் பின்வருமாறு பின்னூட்டமிட்டு இருக்கின்றார்.

"வலைப்பதிவு செய்பவர்களுக்கு தாங்கள் ஏதோ பெரிய பிரபலம் என்ற நினைப்பு இருக்கிறது. வலையுலகை தவிர அவர்களை வெளியில் ஒரு ஈ காக்காவுக்கு கூட தெரியாது என்பது வேறு விசயம்.
சாரு அவர்கள் பிரபலமான ஒரு எழுத்தாளர். ரஜனி கமல் கூட எல்லாம் பழக்கம் வைத்துள்ளவர். சினிமா உலகில் அவர் பிரபலமான ஆள். எழுத்துலகிலும் சாரு அவர்களை தெரியாதவர்களே இருக்க முடியாது.
இவ்வாறு இருக்க நீங்கள் எவ்வாறு அவரை பதிவர் சந்திப்புக்கு அதுவும் காந்தி சிலையின் பின்னால் பேச (வெட்டியாக) அழைக்க துணிச்சல் வந்ததது? "

வலைப்பதிவுலகம் மிகச்சக்திவாய்ந்த ஊடகமாக மாறிக்கொன்டிருக்கின்றது. கருத்துப்பரவலின் ஒரே காரணியாக பத்திரிக்கைத்துறை இருந்தகாலம் மறைந்து கொன்டிருக்கின்றது. பத்திரிக்கை த்துறை மட்டுமே ஒட்டுமொத்த சொந்தம் கொன்டாடிகொன்டிருந்த கொன்டிருந்த அந்த சக்திக்கு பங்குபோட வலைப்பதிவுலகம் வந்துவிட்டது.

கூகிள் நிறுவணம் இந்தியாவில் இல்லாத காரணத்தால், ஒரு சிலரால் மட்டுமே இவ்வூடகத்தை கையகப்படுத்த முடியவில்லை. மாறாக இயல்பான முறையில் பரவிக்கிடக்கின்றது. கூகிளுக்கு நன்றி.

ஐய்யா Anonymous அவர்களே, சாரு இந்த வலைப்பதிவின்மூலம்தான் தனது கோபத்தை வெளிப்படுத்த முடிந்தது என்பதை கருத்தில் கொள்ளவும். அதைவிடுத்து வெளியே சொல்லியிருந்தால் வெளியில் ஒரு ஈ காக்காவுக்கு கூட தெரியாது என்பது அனைவரும் அறிந்த விசயம்.
வலைப்பதிவில் சகலரும் சமமே. பதிவர்கள் பதியும் கருத்துக்களும் அதன் நடையும், தோரனையும் அட அட அட கலக்குறாங்கப்பா.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சாருவுக்கு உயர்வு மனச்சிக்கல் . ம்ம் உங்கள் தமிழாக்கம் வித்தியாசமாத்தான் இருக்குது.
சரியா சொன்னீங்க. ஆமா சாருதான் அந்துமணியா? என்ன புது கதையா இருக்கு?
வித்தியாசமா எழுதுகின்றீர், வாழ்த்துக்கள். புதுசா நீங்க, மாடரேசன் போடலியா?

கருப்பன் (A) Sundar சொன்னது…

//
இருக்க நீங்கள் எவ்வாறு அவரை பதிவர் சந்திப்புக்கு அதுவும் காந்தி சிலையின் பின்னால் பேச (வெட்டியாக) அழைக்க துணிச்சல் வந்ததது? "
//

அந்த அனானி சரியாத்தான் சொல்லியிருக்காரு... நம்மூர்ல பல பயபுள்ளைகளுக்கு சுத்தமா அறிவே இல்லை. கிரேக்க புராணங்கள்ள பூமியை தோள் மேல தாங்கிப்புடிச்சுக்கிட்டிருக்கிற டைட்டன் அட்லஸ்க்கு நம்மூர்ல, பாரு நிவேதிதா-னு பேர்வச்சுகினு இருகாங்கோனு தெரியலையே!!! ஒரு செகன்டு உங்க சந்திப்புக்கு வரமுடியாதுனு சொல்ல சோலை ஒலகம் சப்போட்டு இல்லாம கீழேவிழுந்து ஒடஞ்சுடாதா....????

தவுற ஜீயூஸுக்கு முன்னாடி ஒலகத்தோட கடவுள்ள ஒருத்தரு நம்மாளு... அவரைப்போயி இப்படி பேப்பர் ராக்கெட்ல பேரைப்போட்டு அழைக்கலாமா???

ஐயா சூப்புற ஸ்டாரு எழுத்தாளரே... அழைத்தவருக்கும் உங்களுக்கும் நடக்கும் விஷயத்தை இப்படி பல பேர் படிக்குற வெப்ஸைட்டுல போடலாமா....??

பெயரில்லா சொன்னது…

பாப்பான் பார்ப்பணன் பார்ப்பான் ஆகியவற்றெல்லாம் சொல்லி எழுப்பும் மடையங்கள் பல வகையுள்ளார்கள்; இவை கீழ் வருமாறு :

1) OBC சான்றிதழைக் கைப்பற்றும் தெலுங்கு பேசும் சாதியினத்தவர்.

2) OBC சான்றிதழைக் கைப்பற்றும் கன்னடம் மொழி பேசும் சாதியினத்தவர்.

3) இந்தி மொழி பேசும் OBC முஸ்லிம்கள் மற்றும் இதர சாதிகள்.

இவர்கள் தாங்கள் தமிழர் அல்ல என்பதை மறைக்கும் வழிகள் கீழ் வருமாறு:

1) வஞ்சகமாக ஒரு தமிழ் பெயர் வைப்பது.

2) தாங்கள் வெறுக்கும் தமிழர்களை அவர்கள் தமிழழே கிடையாது என பறைசாடுவது.

3) இந்து, தெலுங்கு மற்றும் தமிழ் அல்லாத இதர மொழி பேசுவோர்களை தாங்கள் தான் "உண்மைத் தமிழர்கள்" என அழைப்பது.

முதலில் தமிழ் நாடு என்கிற மாநிலத்தில் முதலில் தமிழ்மை என்பது கிடையாது. எல்லாமே ஒரு பெரிய வஞ்சகம்.

1)பள்ளிக்கூடங்களில் தொடரும் இந்தி திணிப்பு : நமது தமிழக அரசு தமிழ் கட்டாய மொழி என்பதை பெயர் பெற்றுவிட்டது தவர அதை அமல்படுத்துவதில்லை. தமிழகத்தில் பெரும்பாலுமான CBSE ராணுவ Matric பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது. CBSE பள்ளிகளில் தனி விதிவிலக்கு!! ஆனால் கர்நாடக CBSE பள்ளிகளில் கன்னடம் கட்டாயம்; பஞ்சாப் CBSEஇல் பஞ்சாபி; மகாராஷ்டிராவில் மராட்டி எப்படி அமல்படுத்தப்படுகிறது?

2) இந்தி பேசும் நபர்களுக்கு ஐ ஐ டி, விமானநிலைய, இரயில் நிலைய பாதுகாப்புப் பணிகளில் சிறப்பு இடஒதுக்கீடு.

3) தமிழ் பள்ளிகளை மூடுவது.

4) தமிழ் பேசும் சமூகத்தினரை "அவர்கள் தமிழே கிடையாது" என வஞ்சகப்பேச்சு பரவுதல்.

5) இந்தி பேசும் பீஹாரிகளுக்கு போலி ரேஷன் அட்டைகள் வழங்குவது.

6) சென்னை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாக்குமரி போன்ற இடங்களில் தமிழ் பலகைகளே இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கிலப் பலகைகளில் மட்டும் கடைகள் நடத்துதல்.

7)கல்வித்துறையில் தமிழ் அறியாத OBCகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு.

இதன் பின்னணியின் நமது தமிழ்நாட்டின் தெலுங்கு பேசும் அரசும் அவர்களின் இணையவழி தொண்டர்களில் பார்ப்பான் நாடகம் தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்னும் 50 வருடங்களில் தமிழ்நாட்டில் போலித்தமிழ் OBC வெறித்தனத்தால் தமிழ்நாடு தமிழை விட்டு இந்தி, தெலுங்கு, கன்னடம் மட்டும் பேசும் மாநிலம் ஆகும்.