வியாழன், 16 அக்டோபர், 2008

பங்கு

பங்கு
மிகப்பெரிய அளவினதாக இருக்கும் ஒரு நிறுவனத்தின் முதலீட்டினை ஒருவரே திரட்டமுடியாத பட்சத்தில் மற்றவர்களும் பகிர்ந்துகொள்ளும் முறையில் ஒவ்வொருவரும் கிடைக்கப்பெறும் பகிர்மானம்தான் பங்கு. எடுத்துக்காட்டாக நானூறு கோடி ருபாய் தேவையான ஒரு நிறுவன முதலின் பங்குகள் ஒன்றின் விலை 100 ரூபாய் என்ற அளவில் நாலு கோடிப்பங்குகள் வெளியிடப்படும். இதை வாங்குபவர்கள் அவற்றின் அளவுக்கேற்ப்ப லாபத்தில் பங்குபெறுவர். ஒருவர் ஆயிரம் பங்குகள் வாங்கவேன்டுமென்றால் (1000 x 100 = 100000) ஒரு லட்ச ரூபாய் கொடுக்கவேன்டும். இப்படி வாங்கப்பட்ட பங்குகளை ஒருவர் மெற்றவருக்கு விற்கலாம், மற்றவர் பெயருக்கு மாற்றித்தரலாம்.

பங்கு வர்த்தகம்:
ஒருவர் தன்னிடம் உள்ள பங்குகளை அவசரப்பனத்தேவைக்காக விற்கவேன்டும் என்ன செய்வது? யாரிடம் போய் விற்பது?.
அதுபோல ஒருவர் தன்னிடம் உள்ள உபரிப்பனத்தை ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதன்மூலம் முதலீடு செய்ய நினைக்கிறார். யார்டம் போய் அந்த பங்குகளை வாங்குவார்?.
இங்குதான் பங்கு வர்த்தகம் வருகின்றது. ஒரு பங்கு வணிகர் ஆனவர் பங்குகளை விற்க விரும்புவர்களிடம் இருந்து பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி வைத்திருப்பார். வாங்க விரும்பும் மற்றவரிடம் அதை சிறிது அதிக விலைக்கு விற்பார்.

நம்ம ஊரில் பழைய இரும்பு ச்சாமான் கடைகள் இருக்கும் அதில் உபயோகம் இல்லாமல் இருக்கும் இரும்புப்பொருட்களை ஒரு சிலர் வந்து விற்ப்பர். அதேபோல பழைய இரும்புக்கடைகளில் உள்ள பொருட்களை வாங்குவதற்கும் ஒருசிலர் அந்த கடைக்கு வந்து வாங்கிச்செல்வர்.

பங்குவணிகமும் அதேபோலத்தான் சாதாரனமான பொருள் வியாபாரம் போன்றதுதான்.

இதில் என்ன வந்துச்சு இதில் அப்படி என்ன இருக்குன்னு எழுத வந்துட்ட ன்னு கேக்குரீங்களா?
இருங்க விஷயத்துக்கு வர்ரேன்.

உழைக்காமல் பிழைக்க நினைக்கும் ஒருசிலரால் இந்த பங்குவணிகம் கேவலாமக போய்க்கொன்டு இருக்கின்றது.
பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்கள் தங்களிடம் இருக்கும் பங்குகளை விற்றுக்கொன்டே இருக்கவேன்டும் மறுபுறம் வாங்கிக்கொன்டே இருக்கவேன்டும். அப்பொழுதான் அவர் பங்கு வணிகர் ஆவார். மாறாக அவர் வாங்கிய பங்குகளை விற்காமல் தன்வசமே வைத்திருப்பாரேயானால் அவர் ஒரு முதலீட்டாளர் ஆவார், வணிகர் அல்ல. முதலீட்டாளர் தன்னிடம் உள்ள பங்குகளை உடனே விற்கமாட்டார் நீன்டகாலத்துக்கு வைத்திருப்பார் எனவே மிக நல்ல லாபம் இட்டும், மற்றும் நன்மதிப்பைகொன்டுள்ள கம்பெனியின் பங்குகளைமட்டுமே வைத்திருப்பார். ஆனால் வணிகர் நிறைய லாபம் சம்பாதிக்கும் நோக்கில் பங்குகளை வாங்கி மற்றும் விற்றுக்கொன்டே இருப்பார். நல்ல லாபகரமாக இயங்கிக்கொன்டிருக்கும் கம்பெனியின் பங்குகள் பெரும்பாலும் முதலீட்டாளர்களே வைத்திருப்பர், வணிகத்துக்கு வராது அப்படியே வந்தாலும் அதிக விலை கொடுக்க வேன்டியிருக்கும். சரி என்னடா இது துக்கடா கம்பெனிகளின் பங்குகளின் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியலை என்னபன்னலாம்ன்னு ஒருசில ஹர்ஷத் மேத்தாக்கள் யோசிச்சபோது பளிச்சுன்னு ஒரு ஐடியா அவர்களுக்குள் வந்தது. சரி கம்பெனிகளின் நன்மதிப்பு, நம்பகத்த்ன்மை மற்றும் லாபத்தன்மைதானே ஒரு கம்பெனியின் பங்கு விலையை நிர்னய‌ம் செய்கிறது அந்த சித்தாந்தத்தையே மாற்றுவோம் என்று சபதம்செய்து. பங்கு விலை நிர்னயம் செய்யும் காரணியையே மாற்றிவிட்டார்கள்.

வேன்டுமென்றே துக்கடா சாஃப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். என்னடா லபமே ஈட்டாத உப்புமா கம்பெனியின் பங்கு இப்படி விக்குதேன்னு மற்றவர்கள் முழிச்சுகிட்டு இருக்குறப்ப. இப்பெல்லாம் சாஃப்ட்வேர் கம்பனிகளின் பங்குக்கு மதிப்பு அதிகம். அமெரிக்காவுல இருக்குற கம்பெனிகள் திடீர்னு இந்திய சாஃப்ட்வேர் கம்பெனிகளை வாங்குது, எப்ப விலைகூடும்ன்னு யாருக்குமே தெரியலை. அப்புடீன்னு மனச்சலவைசெய்யப்படுகிறார்கள். இதை ஆராய்ச்சி செய்து ஒன்னுத்துக்கும் ஆகாத கம்பெனியின் பங்குகளை வாங்கிய ஒருவர் கோடிகளை அள்ளிவிட்டார் என்ற செய்திகளும் இந்த தீயில் பெட்ரோல் ஊற்றுகின்றன. பைசாப்பெறாத கம்பெனிகளின் பங்குகளின் விலைகள் உச்சத்தில் போகின்றன.

வணிகர்கள் வாங்கிய பங்குகளை உடனே விற்றுவிடனும் அப்பதான் அவர்கள் பங்குவணிகர்கள் இல்லையேல் அவர்கள் முதலீட்டாளர்கள் என்று சொல்லியிருக்கின்றேன். எனவே அவர்கள் அதை விற்க்கவேன்டும் வாங்கிய விலைக்கே மற்றும் நட்டத்துக்கு விற்க்கமாட்டார்கள் லாபத்துக்குத்தான் விற்ப்பார்கள். அதைவாங்கியவர்களும் லாபத்துக்குத்தான் விற்ப்பர்கள். இப்படியே பங்கின் விலை கூடிக்கொன்டே செல்கிறது புதிது புதிதாக நிறுவனங்கள் பங்குகளை புழக்கத்தில் விட்டுக்கொன்டே இருக்கின்றன.

நன்றாக கவனியுங்கள் அவர்கள் வாங்குவது விற்பது எல்லாம் உணரக்கூடிய பொருளை அல்ல, உணரமுடியாத பங்கு என்ற வஸ்துவை. இப்படியே நன்றாக வணிகம் நடைபெறுகின்றது. கம்பெனிகளின் ஸ்திரத்தன்மை, லாபத்தன்மை, மற்றும் நம்பகத்த்ன்மைதான் ஒரு பங்கின் விலையை நிர்னயித்தகாலம் மலையேறி, வெறும் ஊகங்கள், வதந்திகள், மற்றும் விளம்ப்பரங்களே ஒரு நிறுவனப்பங்குகளின் விலையை நினயம் செய்யும் காலமாகிவிட்டது இந்த காலம். பங்குவணிகத்தில் புரளும் பணத்தின் அளவு கூடிக்கொன்டே செல்கிறது. மென்பொருள் பொறியாளர்களின் தயவால் உலகெங்கிலுமிருந்து அந்நியதேசத்து பனம் கொட்டோகொட்டு என்று கொட்டுகிறது இந்தியாவில். எனவே பணப்புழக்கமும் தாராளமாக இருக்கு இதில். அதில் ஈடுபடுபவர்கள் எல்லாம் பூரித்து பொங்கிப்போயிருக்கிறார்கள். இந்த அதிசயத்தில் கவர்ந்திழுக்கப்பட்டு சர்வதேச வியாபாரிகளும் இந்திய பங்குவனிகத்தில் உள்ளே வருகிறார்கள், அந்நியப்பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது இந்தியாவில். அதை அள்ளுவதற்க்காக அமெரிக்கா வங்கிவனிகத்தில், சில்லரை வர்த்தகத்தில் காப்பீட்டு துறையில் நுழைய அனுமதி கேட்டு செப்படி வித்தைகள் எல்லாம் செய்து வருகிறது. அனுசக்தி ஒப்பந்தம் செய்கிறது, ஒப்பந்தத்துக்கு மறுக்கும் மற்றநாடுகளிடம் எல்லாம் சென்று இந்த்தியாவுக்கக மன்றாடுகிறது. இபபடி ஒரு மாய வணிகம் சூதாட்டம் போல நடைபெற்றுக்கொன்டிருக்கின்றது இந்தியாவில். பங்குகளின் விலை உச்சத்தால் அதைக்கொன்டுள்ளோர் உஅலக பணக்காரர் ஆகிறார்கள். நம்ம அம்பானி பில்கேட்ஸை விட பணக்காரரானது இந்த விதத்தில்தான். பில்கேட்ஸ் பாவம் முக்கி முக்கி சம்பாதித்து வருவாய் அடிப்படையில் பணக்காரன் என்ற பெயரை பெற்றார். ஆனால் அம்பானியோ பங்கு என்ற ஏமாற்று தந்திரத்தின் மூலம் அதிக சொத்துள்ள பணக்காரன் என்ற பெயரை பெற்றார். இப்ப இருக்குற நிலமைல எந்த இடத்துல இருக்காருன்னு தெரியல.

100 ரூபாய் பங்கானது 30 பேர் கை மாறிய பிறகு 600 என்ற விலையில் இருக்கும் என்று வைத்துக்கொள்வோம். 30 வது நபர் அதை 610 க்கு விற்ப்பார். 31 வது நபர் 630க்கு விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சரி வாங்குபவர்கள் எல்லோரும் லாபத்துக்கே விற்றுக்கொன்டிருந்தால் அதன் முடிவுதான் என்ன?

நம்ம ஊரில் சங்கிலி சந்தை என்ற ஒரு உத்தியின் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒருவர் ஆயிரம் ரூபாய் கட்டினார் அவருக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைக்கும். அந்த ஆயிரம் ரூபாயை நடத்தும் றுவனத்துக்கு 250, அதை விற்றவருக்கு 250, அதை விற்றவருக்கு விற்றவருக்கு 200 அதுக்கும் மேலானவ்ருக்கு 50 என்று என்று பிரித்து அனுப்பனும். அப்படி செய்தால் கிடைக்கும் 4 விண்ணப்பங்களை நாலுபேரிடம் ஒவொன்றும் ஆயிரம் ரூபாய்க்கு விற்கனும். இதன்மூலம் செலவழித்த 1000 ரூபாய் உடனே கிடைக்கும். அதை வாங்கியவர்கள் மற்றவர்களுக்கு விற்கையில் ஒரு 800 ரூபாய் கிடைக்கும் என்று சொல்லி சந்தைப்படுத்துவார்கள். இதில் எந்த ஒரு வனிகமும் நடைபெறவில்லை எந்த பண்டமும் மாற்றுப்பெறவில்லை. வெறுமெனே பணம் மட்டும் பரிவர்த்தனையாகிறது. ஒருவரிடம் இருக்கும் பணம் மற்றவருக்கு அனுப்பப்படுகிறது. மக்கள் பனமே மக்களுக்கு செல்கிறது. மக்களும் சரி என்னாஅகுதுன்னு பாப்போம் 1000 ரூபாய்தானே ந்னு நினைச்சு செய்யுறாங்க. அதை நடத்தும் நிறுவனத்துக்கு கொள்ளை லாபம், விற்கும் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் 250 ரூபாய் கிடைக்கிறது. ஒருகட்டத்தில் 1000 செலவழிக்கத்தயாராக இருக்கும் அனைவரும் ஏமாற்றப்பட்ட நிலையில் யாருமே கட்டாமல் விடுகையில் இந்த சங்கிலித்தொடரானது அறுந்த்து முடிவுக்கு வரும். இதில் ஈடுபட்ட ஒவ்வொருவரின் தலைக்கும் 250 ரூபாய் என்ற வீதத்தில் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும்.

இதுதான் இப்ப நடந்துகொன்டிருக்கின்றது பங்கு வனிகத்தில். பங்குகள் வாங்கு வங்குன்னு வாங்க‌ப்பட்டு வீங்கிபோயி இருக்கு. ஒருகட்டத்தில் யாருமே வாங்கமுடியாமல் போகவே, பர பரன்னு தகவல்கள் பரவுகிறது. என்ன இந்த பங்கையே வாங்க ஆளில்லையே எப்படி நம்பி மற்ற பங்குகளை வாங்குவதுன்னு யோசித்து தயக்கம் காட்டுகிறார்கள். இது சங்கிலித்தொடர்போல பரவுகிறது. வனிகம் தடைபடுகிறது. விலை உயரும்ம்னு நினைத்து கன்னபின்னானு வாங்கி வைத்தவர்கள் எல்லாம் கலக்கம் கொள்ளுகிறார்கள். இதில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் விலகிக்கொள்ளுகிறார்கள்.
பங்குச்சந்தையில் பலத்த அடின்னு செய்திகள் வருகின்றன.

டாட்டாக்களும், பிர்லாக்களும், அம்ப்பானிகளும் பணக்காரர்களாக இருக்கனும். மேலும் லாப நிச்ச்யமற்ற இந்த சூதாட்டத்தினை ஊக்குவிக்கனும் அதுக்காக பணக்காரர்களின் ஆபத்பாந்தவன்களான சிதம்பரமும், மன்மோகன் சிங்கும் பெரும்பாடு பட்டுக்கொன்டு இருக்கின்றார்கள். சந்தை சரிந்து விழும்பொழுதெல்லாம் அதுக்கு முட்டுக்கொடுக்கும் விதமாக அறிக்கைகள் வருகின்றன. "யாரும் பயப்படவேன்டாம், நமது நிதி அமைப்பு பலமாக இருக்குது எனவே தயங்காதீர்கள் பங்குகளை வாங்கிக்குவியுங்கள்" என்று கூவு கூவுன்னு கூவி உதவுகிறார்கள். மேலும் இதில் நல்ல பணம் புழங்கவேன்டும் என்பதற்காக ரிசர்வ்‍வங்கியிலிருந்து நிதியையும் விடுவிக்கின்றார்கள். எத்துனை ஒட்டுப்போட்டாலும் டவுசர் கிழிந்துகொன்டுதான் இருக்கிறது,

விவசாயிகள், அன்றாடம் காய்ச்சிகள், கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்கு நாமம் தான் போடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: