புதன், 4 பிப்ரவரி, 2009

கலைஞரின் இக்கட்டான சூழ்நிலை

கலைஞரின் இக்கட்டான சூழ்நிலை புரிகிறது. காங்கிரசுடன் உறவுவைத்துக்கொள்ள அதிமுக துடித்து காத்துக்கொண்டிருக்கு தமிழாக காங்கிரஸ் காரர்கள் பலரும் அதிமுகவுக்கு சேவகம் செய்ய காத்துக்கொண்டு இருக்கிறார்கள் . ஈழத்தமிழர்கள் ஆதரவு நிலை எடுத்தால் கண்டிப்பாக திமுக ஆட்சி காங்கிரசால் கலைக்கப்பட்டுவிடும் , தமிழ்நாட்டு மக்களையும் நம்ப முடியாது, முன்னர் செய்ததுபோல் ஜெயலலிதாவை ஆதரித்து வரவைத்துவிட்டால் என்னசெய்வது?
கலைஞரின் இக்கட்டான சூழ்நிலை புரிகிறது.
சூழ்நிலையின் தீவிரத்தினை குறைக்க, சோனியாவையோ, அல்லது வேறு முக்கியமான காங்கிரஸ் தலைவரை தன்நிலை விளக்கம் கொடுக்க செய்யலாமே. தமிழர்கள் நாதியே இல்லாமல் அழிக்கப்படும்போது நாளை தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் நேர வாய்ப்பிருக்கு அப்பொழுதும் உலகமே வாய்மூடி மௌனமாகத்தானே இருக்கும் என்ற அச்சம் அனைவரின் மனதிலும் இருக்கு.

இலங்கைக்கு அழைப்பு விடுத்த மஹிந்தவிடம், வன்னியிலிருந்து வெளியேறும் மக்களின் வாழ்க்கைக்கு என்ன உத்திரவாதம் செய்திருக்கீர்கள் என்று ஒரு கேள்வியேனும் கேட்டிருக்கலாமே?. 2 பேர், 20 பேர்,அட அல்லது 2000 பேர் என்றால், தீவிரவாதிகள் என்று சொல்லலாம், 3 லட்சம் பேர் என்றால் அது சமூகப்போராளிகள்தானே என்று அர்த்தம் இதை ஏன் உலகார்ந்த அறிவாளிகள் சொல்லமாட்டேன் என்கிறார்கள்?

மஹிந்த இலங்கையில் ஓட்டு வாங்குவதற்கு தமிழர்களை கொல்லுகிறான். அது அனைவருக்கும் தெரிந்ததுதான், கலைஞரும் ஏன் ஒட்டு வாக்குவதற்காக இப்படி பேசுகிறேன் என்று காங்கிரஸை சமாதானப்படுத்தக்கூடாது?

எற்கனவே ஈழத்தமிழர்களால் ஆட்சியிழந்தபோது மக்கள் திமுகாவின் முகத்தில் கரியை பூசி அதிமுகாவுக்கு ஓட்டுப்போட்டார்கள்

அடுத்த‌ தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவினை திமுகவுக்கு அளிக்கத்தயாரா என்று திருமா, ராமதாஸ், நெடுமாறன் ஆகியோரிடம் ஏன் பகிரங்கமாக கேள்வி கேட்க்கக்கூடாது? அவர்களின் வன்டவாளம் மக்களுக்கு தெரியும் அல்லவா?

எப்படியோ தமிழர்களின் தலைவர் இன்னும் தடம் புரளவில்லை என்று காட்டக்கூடிய‌ நிலையில் இருக்கின்றார்

கருத்துகள் இல்லை: