வெள்ளி, 23 ஜனவரி, 2009

இந்தியா ஒரு பயந்தாங்கொள்ளிநாடு

நிலமை சரியாகவே இல்லை மேலும் மேலும் மோசமாகத்தான் போயிக்கொன்டு இருக்கின்றது. ஈழத்தமிழர்களைப்பற்றித்தான் சொல்லுகிறேன்.

விடுதலைப்புலிகள் ஏன் இப்படி பின்வாங்கி ஓடுகின்றனர் என்று புரியாத புதிராகத்தான் இருந்தது, மனதுக்கும் கலக்கமாக இருந்தது. சந்தோஷமாக பதிவுகள் இடக்கூட மனது வரமாட்டேன் என்கிறது.

நாங்கள் களத்தில் செம்மையாக பணியாற்றுகிறோம் அனைத்தையும் உடைத்து கூறமுடியாது என்ற புலிகளின் செய்தியை கன்டு மனம் சற்று நிம்மதி கொள்கிறது.
புலிகளின் செய்தியினை இங்கே கானவும் http://www.youtube.com/watch?v=kXNSLfGUrTk

மகிந்தவின் போருக்கு ஜப்பான் ஆதரவு என்று செய்தி நெருடல் இனையத்தில் படிக்க நேர்ந்தது, தமிழர்களை ஒடுக்க உலகமே ஒன்றுபட்டு உழைக்கின்றன.

ஜப்பானில் இருந்த காலத்தில் எனக்கு இரண்டு ஈழத்தமிழ் நன்பர்கள் இருந்தனர், நான் தங்கியிருந்த மேன்ஷனிலேயே இருந்தனர். நான் அவர்களிடம் சென்று வாஞ்சையுடன் பேசிக்கொன்டிருப்பது வழக்கம். அவர்களது குடும்பத்தில் ஒவ்வொருவரும் உலகத்தின் ஒவ்வொரு மூலையில் இருப்பதை யும், நான் குடும்பத்தைவிட்டு தனித்து இருப்பதையும், குடும்பத்தோடு இருந்த காலத்தினை சிலாகித்து பேசிக்கொன்டு இருப்போம். ஈழத்தமிழர்களின் சுத்தமான தமிழ் பேச்சினை ரசித்துக்கேட்ப்பது எனக்கு நிரம்பவும் பிடிக்கும். ஒருமுறை அந்த ஈழ நன்பர் என்னிடம் பேசிக்கொன்டு இருக்கும்போது
"நீங்கள் யாரிடம் கதைத்துக்கொன்டிருக்கின்றீர்கள் என்று தெரியுமா? பிரபாகரனின்ட மகனிடமாக்கும்" என்றார் அதைக்கேட்டு எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. பிறகு சொன்னார் பகடிக்காக அப்படி கதைத்தேனென்று.

பத்திரிக்கைகள் எல்லாம் தலையங்கத்தில் எழுதுகின்றன, சிவசங்கரமேனன் போனது, போய் சிங்கள ரானுவத்தை பாராட்டிவிட்டு வந்தது, பிரனாப் போகாதது தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் ஆர்வல தலைவர்களை இந்திய அரசு கேனையர்களாக நினைத்துக்கொன்டிருப்பதை.

ஆனந்தவிகடனில் கீழ்கன்டவாறு தலையங்கம் எழுதப்பட்டு இருக்கு

"செருப்பால் அடித்துவிட்டுக் கருப்பட்டி கொடுக்கும் அசிங்கத்தைக் கூசாமல் செய்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு. நொந்துபோன இதயங்களில் மறுபடி கூர் வேல் பாய்ச்சி இருக்கிறது.

அப்பாவித் தமிழரின் நலன் காக்க, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் இலங்கை செல்வார் என்று தொடர்ந்து வெளியாகிவந்த செய்திகள் எதிர்பார்ப்பு கலந்த ஆறுதலை அளித்தன. அமைச்சருக்கு அப்படி என்னதான் 'தலைக்கு மேல்' வேலையோ... அவருக்குப் பதிலாக, வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனனை மத்திய அரசு அனுப்பிவைத்ததே பெரிய தவறு!

கண்டியில் ராஜபக்ஷேவைச் சந்தித்தபோது, 'யுத்தத்தின் பெயரால் தமிழர்களைக் கொன்று குவிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று சிவசங்கர் மேனன் சொல்லவில்லை. மாறாக, 'போர்ச் சூழலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு நிவாரண உதவிகள் அளிக்கும்' என்று மோசமான ஒரு வாக்குறுதியை அளித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

பாலஸ்தீனத்து மக்களின் மீது குண்டு வீசக் கூடாது என்று நான்கு தடவை இஸ்ரேலைக் கண்டிக்கத் தெரிந்த மத்திய அரசுக்கு, கூப்பிடு தொலைவில் நடக்கும் அநியாயத்துக்கு எதிராகக் குரல் உயர்த்த மனம் இல்லாதது எத்தகைய கொடுமை!

'இந்தியாவின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். எனவே, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது' என்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்றால், அதை வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன தயக்கம்? 'இல்லை, இல்லை... ஈழத் தமிழர் அனைவரும் எங்கள் தொப்புள்கொடி உறவு. அவர்கள் துன்பத்தைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்' என்பதே உண்மையான நிலைப்பாடாக இருந்தால், உடனடியாக இலங்கை அரசின் சிண்டைப் பிடித்துக் கண்டிக்க வேண்டாமா?

நாட்டுப் பாதுகாப்பும் முக்கியம், ஓட்டுப் பிச்சை வாங்குவதும் முக்கியம் என்ற வழவழா கொழகொழா அணுகுமுறை காரணமாக நாடகமாடுவதும் நாட்களைக் கடத்துவதுமே தொடர்ந்தால்... மத்திய அரசின் மீதான நம்பிக்கை அற்றுப்போய், அதுவே நம் உள்நாட்டு அமைதிக்கும் வேட்டாகிவிடும்!"



இதையெல்லாம் பார்க்கும்போது இந்தியா ஒரு பயந்தாங்கொள்ளிநாடு என்ற சிந்தனை வருது.
ராஜீவ்காந்த்தியினை ஒரு சிங்களன் துப்பாக்கியால் தாக்கியதை பார்த்தாலே தெரியும் சிங்களர்கள் இந்தியா மீது எத்துனை கடுப்பா இருக்கின்றனர் என்று. ஈழத்துக்கு ஆதரவாக ஏதாவது பேசினால், இலங்கை சரத் பொன்சேகா சோனியாவை கோமாளி என்று சொல்லுவார், மஹிந்த மிக கேவலமாக மன்மோகனிடம் சவால் விடுவார், அதை எதிர்த்து எதுவும் சொல்லமுடியாது. இப்படி ஒரு நிலமை வந்தால் இந்திய அரசாங்கத்துக்கு கையாலாகாத அரசுன்னு பேர் வந்துடும். அதுக்கு பயந்துதான் இப்படி மொழுகுகின்றனர். தமிழர்கள்தானே அவர்கள் கேவலமாக பேசமாட்டார்கள், பன்பு பாசம் ன்னு போயிடுவாங்க அதுனால தமிழர்கள் செத்தால் சாகட்டும்னு சிங்களத்துக்கு சிங்கியடிக்கிறாங்க.

கருத்துகள் இல்லை: