செவ்வாய், 19 மே, 2009

நம்மில் ஒவ்வொருவரும் பிரபாகரன்தான்.



நாதியில்லாத தமிழ் சமூகம் இலங்கையில் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டு, சோறு, தண்ணீர் இல்லாமல் வீதிக்கு விரட்டி. மகன், மகள், அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை அனைவரும் பிரிக்கப்பட்டு, கொல்லப்பட்டு. லட்சம் மக்களை மனவியாதிக்காரர்களக்கி, மனிதப்பேரவலத்தை தாங்கமுடியாமல், தம்மக்களுக்கு உணவுகூட கொடுக்க முடியவில்லையே என்று வேதனையில் வெம்பி, வெளித்தொடர்புக்குகூட வழியில்லாமல்.

எங்கள் துப்பாக்கிகளை மௌனிக்கின்றோம் என்று அறிக்கை வெளியிட்ட‌போதே எனக்குள் சுர்ரென்று பொறிதட்டியது, நினைத்ததுபோலவே நடந்துவிட்டது.

சூசை அவர்கள் 3 நாட்க்களுக்குமுன்னர்கூட அழுதார், 10000 பேர் 3 நாளில் கொல்லப்பட்டனர், 25000 பேர் படுகாயமுற்று இருக்கின்றார்கள். லட்ட்சம் மக்கள் உணவில்லாமல் இருக்கின்றனர் என்று. அவனின் கண்ணீரும் இப்பொழுது அடக்கப்பட்டுவிட்டது.

லட்சம் மக்களின் கதறலை இவ்வுலகமே அலட்சியம் செய்தது.

நாத்திகர்களே, சொல்லுங்கள் இம்மக்களுக்கு இப்படிபட்ட சூழ்நிலையில் கடவுளைத்தவிற வேறு யார்மீது நம்ப்பிக்கை வரும்?

நாதியில்லாமல், பிழைக்க வழியில்லாமல் தன்னை நம்பி வந்த மக்களை கண்ணை இமை காப்பதுபோல காத்து, எதிரிகளுடன் போராடி, முடியாதபோழுது தன்னை மாய்த்துக்கொள்ளும் போராளிபாக்குவத்தில் தங்களை முடித்துக்கொன்டனர் புலிகள்.
சரனடைய வெள்ளைக்கொடியுடன் வந்தார்கள் என்பதைஎல்லாம் நான் நம்பத்தயாராய் இல்லை.

அடிப்பொடிகளை களமாடவிட்டு தான் மட்டும் தப்பிப்போக வழியிருந்தும் தப்பிக்காத மாபெரும் தலமையைக்கொன்டது விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது நிருபனமாகியிருக்கின்றது.
மாபெரும் தலைவன் பிரபாகரனின் அபிலாஷைகள், கனவுகள் ஆசைகள் நிறைவேறுவதைபார்க்காமலே சென்றுவிட்டார்களே தலைவர்கள் என்று யாரும் கவலைப்படத்தேவையில்லை. போராளிகள் விதைக்கப்பட்டுதான் இருக்கின்றார்கள். தமிழர்களுக்கு என்று ஒரு நாடுவேன்டும், தமிழர்கள் எப்படி தங்களது உண்ன‌தமான உழைப்பினால், யாரையும் சார்ந்திராமல் முன்னேறுவான் என்பதை உலகிற்க்கு காட்ட, நமது தமிழ் தேசிய தலைவர் சொல்லிக்கொடுத்து இருக்கின்றார். எனவே தமிழர்களே விட்டொழியுங்கள் அழுகையை, நம்மில் ஒவ்வொருவரும் பிரபாகரன்தான். கலக்கத்தை விட்டொழித்த்து, புது உலகை நிர்மானிக்கத்தயாராகுங்கள்.

தமிழர்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்குவோம். தமிழ் தேசியத்தலைவரின் கணவை உன்மையாக்குவோம்.

நமக்கு யாருமே உதவியில்லை, நமக்கு நாமேதான் உதவி. உழைப்பு, உழைப்பு, உழைப்பு வேறெதுவும் சிந்திக்காமல் உழைப்பு உழைப்பு உழைப்பு ஒன்றைமட்டுமே கொள்கையாகக்கொன்டு முன்னேறி , நமது பிள்ளைகளுக்கு மாவீரர்களின் தியாகங்க‌ளை சொல்லி வளர்த்து, நல்ல நேரம் வரும் நாளை எதிர்பார்த்து இருப்போம்.

கருத்துகள் இல்லை: