வியாழன், 28 மே, 2009

நான் தமிழன், தோல்வியை ஒத்துக்கொள்கிறேன்




தமிழன் அடங்கிக்கிடக்கப்பிறந்தவன் இல்லை என்று ஒவ்வொருவரும் நெஞ்சை நிமிர்த்திச்சொல்லும் வகையில் என்னங்களுக்கு உரமேற்றிக்கொன்டிருந்த என் தலைவன் தமிழ் ஈழ தேசிய த்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வஞ்சகர்களின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது, எனது "நான் தமிழன் " என்ற பெருமிதத்துக்கு கிடைத்த பெரிய அடியாகும். நான் தோல்வியை ஒத்துக்கொள்கிறேன். தமிழன் என்றைக்கும் அடங்கிக்கிடக்கப்பிறந்தவந்தான். என்றைக்காவது ஒருநாள் எனது உயிர் போவதுக்குள் மீன்டும் "நான் தமிழன்" என்று சொல்லும் காலம் வராதான்னு ஏக்கத்துடனே சொல்லிக்கொள்கிறேன்,

சொல்லுங்க எசமான் நாங்கள் தமிழர்கள், அடங்கிக்கிடக்கமட்டும் பிறந்தவர்கள், எங்களை அடக்க உரிமைப்பெற்றவர்கள் நீங்கள், எங்களது உழைப்பு, மற்றும் சொத்துக்கள் அனைத்தும் உங்களுக்கானவை, நீங்கள் பார்த்து ஏதாவது செய்தால், வாங்கிக்கொள்கிறேன்.

தலைவா தியாகத்தின் திருவுருவமான உன்னைப்போல ஒருவன் இவ்வுலகத்தில், மறுபடியும் வருவானா? உன்னால் நாங்களும் தமிழன் தான் என்று பெருமிதப்படும் காலம் வருமா? ஈழத்தில் சொந்தங்களை, சொத்துக்களை, சுகங்களை இழந்த தமிழ் உறவுகளின் மனக்காயங்களை காலம் ஆற்றும் அதுக்கான பக்குவத்தினை கடவுள் கொடுக்கட்டும். கண்ணீருடன் தமிழ் உணர்வுக்கு விடைகொடுக்கின்றேன்.